Sports | விளையாட்டு
ஓடும் பேருந்தை பதம் பார்த்த ரோஹித்தின் மெர்சல் சிக்ஸ்! வைரலாகும் வீடியோ
கொரானாவின் பயத்தால் தான் இம்முறை ஐபிஎல் போட்டிகளை UAE-க்கு மாற்றி உள்ளார்கள்.
ஐபிஎல் 2020 ஆறு மாசம் தள்ளி போய் இம்மாதம் தொடங்கப் போகிறது. இம்முறை TRP அதிரப்போகிறது என வல்லுனர்கள் கணித்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இரண்டு டீம்களுக்கும் அதிக ரசிகர் வட்டம் உண்டு. மும்பையின் பாவரிட் ரோஹித் சர்மா. இந்திய கிரிக்கெட்டின் ஹிட் மேன்.
நிறைய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் மேட்ச் லெவலில் இரட்டை சதம் அடிக்க தடுமாறும் சூழலில் ஒரு நாள் போட்டிகளில் அசால்டாக இரட்டை சதம் அடித்து அசத்துபவர்.
இவர் அபு தாபியில் ப்ராக்டிஸில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் குவித்து வருகிறது. இவர் அடித்த சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே செல்லும் பஸ் மீது மீது பட்டது. 95 மீட்டர் சென்ற அந்த சிக்ஸ் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டது என்பதை பின்னர் உறுதி செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்.
