Sports | விளையாட்டு
அம்பயர் மேல் கோவப்பட்டு ரோஹித் சர்மா செய்த செயல். கழுவி ஊத்தும் கிரிக்கெட் ரசிகர்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.
இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன். “ஹிட் மேன்” என செல்லமாக அழைக்கப்படுபவர். இந்திய அணியின் துணைக்கேப்டன், மும்பை இந்தியன்ஸ் டீம்மின் கேப்டன். நேற்றயை போட்டியில் என்ன தான் ஹர்டிக் பாண்டியா இறுதியில் போராடினாலும், ரசல் அவர்களின் ஆல் – ரவுண்டு திறமையால் கொல்கத்தா அணி போட்டியை வென்றது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் குர்னே வீசிய 4-வது ஓவரில் ரோஹித் சர்மாவின் பேட் பாலை மிஸ் செய்ய கால்காப்பில் பந்து பட்டது. நடுவர் எல்பிடபிள்யு கொடுத்தார். ரோஹித் சர்மா மூன்றாம் நடுவரிடம் ரெவியூ செய்தார். எனினும் இறுதியில் மைதானத்தில் இருப்பவர் சொன்னதன் முடிவே பைனல் ஆனது. மைதானத்தில் இருப்பவர் நாட் அவுட் என சமிக்ஞ்சை செய்திருந்தால், நாட் அவுட் என்று தான் வந்திருக்கும். இதில் கடுப்பான ரோஹித் டக் – அவுட் செல்லும் போது தனது பேட்டால் ஸ்டெம்பை தட்டிவிட்டுச் சென்றார். இறந்த செயலை நம்ப முடியாமல் பலரும் பார்த்தனர்.
@mipaltan pic.twitter.com/1mFjCSQr00
— Cinemapettai (@cinemapettai) April 29, 2019
ரோஹித் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளனர். அது என்னவோ அஸ்வினில் ஆரம்பித்து, தோனி, ரோஹித் வரை இம்முறை கேப்டன்களும், சர்ச்சையும் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
