Sports | விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் டீம்முடன் பிறந்தநாள் கொண்டாடிய ரோஹித் சர்மா
ஹிட் மேன் ரோஹித் சர்மா உலகளவில் மோசட் ஸ்டைலிஷ் கிரிக்கெட்டர். ஒரு நாள், டி 20 போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர். டெஸ்டில் மத்திய வரிசையில் ஆடுபவர். மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் ஆப் சபின்னராக இருந்தவரை, இவரின் கோச் தினேஷ் லாட் தான் பள்ளி போட்டிகளில் ஓப்பனிங் பாட்ஸ்மானாக இறக்கினாராம். அதன் பின் பேட்டிங்கில் இவர் செய்த சாதனைகளோ ஏராளம் தான்.
மும்பை இந்தியன்ஸ்
ஏப்ரல் 30 இவரின் பிறந்தநாள். மும்பை இந்தியன்ஸ் டீம்முடன் கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அருகில் இவர் மனைவி ரித்திகாவும் இருந்தார். சிறிது நேரத்தில் இளம் வீரர் இஷான் முழு கேக்கையும் எடுத்து ரோஹித் மூஞ்சு மட்டும் தலையில் அப்பினார். இதோ அதன் வீடியோ.
பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இவர் பிறந்தநாளுக்கென்று தனி இன்ஸ்டகிராம் பக்கம் உருவாக்கி, அதில் சில அறிய போட்டோ கலெக்ஷனையும் பகிர்ந்துள்ளார்.
