Connect with us
Cinemapettai

Cinemapettai

சோதனை முடிந்து ரீ-என்ட்ரி கொடுக்கும் அதிரடி ஆட்டக்காரர்.. பழைய பன்னீர் செல்வத்தை காண துடிக்கும் ரசிகர்கள்!

Yo-Yo-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

சோதனை முடிந்து ரீ-என்ட்ரி கொடுக்கும் அதிரடி ஆட்டக்காரர்.. பழைய பன்னீர் செல்வத்தை காண துடிக்கும் ரசிகர்கள்!

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கபட்டவர் ரோகித் சர்மா. ஆஸ்திரேலியா தொடரை எதிர்பார்த்து இருந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடர் முழுக்க இவர் தேர்வு செய்யப்படவில்லை.

ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது அதன் பின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடினார். அவர் தலைமையில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.

ரோகித் சர்மாவின் காயம் முற்றிலுமாக குணமடையவில்லை. இவர் போட்டியில் பங்கேற்க கூடாது, இதை மீறி போட்டிகளில் பங்கேற்றால் அவர் கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்று ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

லாக் டவுன் காலங்களில் ரோஹித் சர்மாவின் உடல் எடை அதிகமாக இருக்கிறது. அதனால் இவர் அணியில் சேர்வதற்கு முன் உடல் எடையை குறைக்க வேண்டும். அப்போதுதான் யோ யோ டெஸ்டில் பாஸ் செய்ய முடியும் என்றும் கூட கூறப்பட்டது.

இந்த நிலையில் 14 நாட்கள் ரோஹித் சர்மா தொடர்ந்து கஷ்டப்பட்டு தனது உடல் எடையை கொஞ்சம் குறைத்து இருக்கிறார். அதேபோல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று தனது காயத்தில் இருந்து விடுபட்டு உள்ளார்.

மொத்தமாக ரோஹித் சர்மாவிற்கு இரண்டு விதமான சோதனைகளை செய்யப்பட்டது. முதல் சோதனை இவரின் காயம் சரியாகிவிட்டதாக என்பது குறித்து சோதனை செய்யப்பட்டு, காயம் ஆறியது உறுதி செய்யப்பட்டது. இரண்டாவது டெஸ்டில் அவரது உடல் எடை பரிசோதனையும் செய்யப்பட்டது இரண்டிலும் ரோஹித் சர்மா தேர்வாகி அணியில் வெகுவிரைவில் இணைய உள்ளார்.

Rohit-Fitness-Cinemapettai

Rohit-Fitness-Cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top