தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரை நான் பார்க்கவில்லை - காரணம் சொல்லும் ரோஹித் சர்மா ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரை நான் பார்க்கவில்லை – காரணம் சொல்லும் ரோஹித் சர்மா !

News | செய்திகள்

தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரை நான் பார்க்கவில்லை – காரணம் சொல்லும் ரோஹித் சர்மா !

நிதாஸ் கோப்பை

இலங்கையின் 70 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக ஒருங்கிணைக்கப்பட்ட முத்தரப்பு டி 20 போட்டி. இலங்கை அணியை வெளியேற்றிவிட்டு பங்களாதேஷ் மற்றும் இந்திய சண்டே நடந்த பைனலில் மோதியது.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கோப்பையை வென்றது இந்தியா.

india-bangladesh

india-bangladesh

தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மூன்று 6 , மற்றும் இரண்டு 4 அதில் அடக்கம். இந்த வெற்றிக்கு பின் அணியின் கேப்டன் ரோஹித் பல விஷயங்கள் பேசினார். அதில் அவர் தினேஷ் கார்த்திக் பற்றி பேசியதன் சிறு தொகுப்பு மட்டும் இங்கே ..

” நான் 13 வைத்து ஒவேரில் அவுட் ஆகி திரும்பிய பொழுது தினேஷ் கார்த்திகை ஆறாம் இடத்தில இரக்கத்தால் அவர் வருத்தத்தில் இருந்தார், மேலும் இந்த தொடர் முழுவதும் நான்காம் வரிசைக்கு கீழேயே அவரை பேட்டிங் ஆட இறக்கினோம். அவர் அனுபவம் வாய்ந்த வீரர் . மேட்ச் பினிஷ் செய்யும் திறமை உடையவர் என்பதால் தான் இந்த முடிவை எடுத்து அணி நிர்வாகம்.

அன்றைய போட்டியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் 18 மற்றும் 20 வது ஓவரை வீசுவார் என எதிர்பார்த்தேன். அவர் பந்துகளை அடித்து ஆடும் ஷாட்டுகள் தினேஷிடம் உள்ளது என்றார்.

Nidhaas Trophy

ஒட்டுமொத்த இந்தியாவும் கடைசி பந்தில் ஜெயிக்க 5 ருங்கள் தேவை என்ற பொழுது டிவியை பார்த்திருந்த சமயம் ரோஹித் அந்த பந்தை பார்க்கவில்லையாம். அந்த பந்து 4 செல்லும் பட்சத்தில், சூப்பர் ஓவர் நிகழும் என்பதால், தான் பேட்டிங் இறங்க பேட் கட்ட சென்றாராம் ரோஹித். எனினும் ட்ரெஸ்ஸிங் ரூமில் எழுந்த சத்தத்தை வைத்து தினேஷ் சிக்ஸர் அடித்துவிட்டார், கோப்பையை நாம் வென்று விட்டோம் என்று உறுதிப்படுத்திக்கொண்டு விட்டாராம் ரோஹித்.

memes

Nidhaas trophy

அதனால் தான் அந்த கடைசி பணத்தை அவர் லைவ்வில் பார்க்கவில்லையாம். மற்ற படி வேறு ஏதும் சென்டிமென்ட் எல்லாம் கிடையாது என்று தெளிவு படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top