fbpx
Connect with us

மீண்டும் சிக்கலில் இந்திய அணி வீரர், அதிரடியாக நீக்கிய பிசிசிஐ.. வருத்தத்தில் ரசிகர்கள்!

Sports | விளையாட்டு

மீண்டும் சிக்கலில் இந்திய அணி வீரர், அதிரடியாக நீக்கிய பிசிசிஐ.. வருத்தத்தில் ரசிகர்கள்!

ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அவர் காயம் காரணமாக நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்திய அணி அடுத்து வரவிருக்கும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது.

மூன்று வடிவ போட்டியிலிருந்து அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார், அவர் காயம் காரணமாக நீக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக கே எல் ராகுலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர் காயத்தில் இருந்து மீண்டு விட்டதாக குறிப்பிடும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு முன் இடது காலில் காயம் அடைந்தார். அவருக்கு தசைபிடிப்பு இருப்பதாக கூறப்பட்டது, அவர் அதிக வலியில் இருந்ததாக மட்டுமே செய்தி வெளியானது.

இதற்கிடையே, ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக வதந்தி பரவியது, இது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இருந்தாலும் ரோஹித் சர்மாவிற்கு பெரிய காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அணியில் இருந்து நீக்கம் துணை கேப்டன் அறிவிப்பு போன்ற செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்கின்றன.

indian-team-dress

indian-team-dress

Continue Reading
To Top