Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

ரோஹித் சர்மாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய விராட் கோலி.. வெளிவந்த உண்மையால் வருந்தும் ரசிகர்கள்!

ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டார். டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பட்டியல் நேற்று வெளியானது.

இந்த பட்டியலில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை. ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

விராட் கோலி, ரோகித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ரோகித் சர்மாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காரணங்கள் வெளியாகியுள்ளன.

ரோகித் சர்மா உடனே இந்தியா திரும்பும் பட்சத்திலும், காயத்திற்கு உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறையிலும், அதன்பின் தனது ஃபிட்னஸ்சை நிரூபிக்கும் பட்சத்திலும், போதிய கால அவகாசம் தேவைப்படுகின்றன.

இவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்தையும் நிரூபித்து காட்டினாள், ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்திய அணியில் இணையலாம் என்கின்றனர்.

இதற்கு ரோகித் சர்மா மீதமுள்ள ஐபிஎல் போட்டியை விட்டு விட்டு உடனே நாடு திரும்ப வேண்டும். கொரோனா விதிகள் காரணமாக இவர் உடனே இந்திய அணியில் இணைய முடியாது. இதனால் ரோஹித் சர்மா இந்திய அணிக்குள் வர சில வாரங்கள் ஆகலாம்.

England v India

England v India

Continue Reading
To Top