இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக மைதானம் சேதமான நிலைமையில் போட்டி டிரா ஆகிவிடும் என எதிர்பார்க்கையில் இந்திய அணி மொத்தமாய் இந்த போட்டியை மாற்றியது.
டாஸ் ஜெயித்து பங்களாதேஷ் அணியை முதலில் களம் இறங்க செய்த இந்திய அணி 75 ஓவர்களில் 233 ரன்களுக்கு சுருட்டியது. மழை காரணமாக இந்த 75 ஓவர்களும், வீசுவதற்கு 3 நாட்கள் மற்றும் ஒரு பாதி நாள் எடுத்துக் கொண்டது. ஆக ஒரு அணி பேட்டிங் முடிக்கவே மூன்றரை நாட்கள் ஆனது. எப்படியும் இந்த போட்டிக்கு ரிசல்ட் கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது களம் இறங்கிய இந்திய அணி 35 ஓவர் களுக்கு 285 ரன்கள் என அதிரடி ஆட்டம் ஆடியது. இதன் மூலம் 52 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இப்படி இந்த போட்டி விடை கிடைக்காத ரூட்டிலேயே சென்றது. இதற்குள் நான்கு நாட்கள் கடந்தது. இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய பங்களாதேஷ் அணி நான்காம் நாள் ஆட்டம் முடிவில் 26 ரன்களுக்கு இரண்டு விக்கெடுகளை மட்டுமே இழந்திருந்தது.
T20 ரிட்டையர்டு அறிவித்து 10 ஓவருக்கு ரெடியான ரோகித்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் ஆசத்தினார்கள். இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியின் மிஞ்சிய 8 விக்கெட்டுகளையும் 120 ரன்களுக்குள் சுருட்டினார்கள். இதன் மூலம் இந்திய அணிக்கு 94 ரன்கள் மட்டுமே டார்கெட் ஆக கொடுக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 17 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து விரட்டி பிடித்தது.
யாருமே எதிர்பார்க்காமல் போட்டியை இந்திய அணி வென்று அசத்தியது. இதற்கு காரணம் ரோஹித்தின் படை அசுர வேகத்தில் ரண்களை குவித்தது தான். 20 ஓவர்கள் போட்டியை கூட மறந்து10 பவர்கள் போட்டி என நினைத்து டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடினார்கள் இந்திய அணியினர். 34 ஓவர்களில் 285 ரன்கள் அடித்தது தான் இந்த போட்டி வெற்றி பெற காரணமாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் ரிட்டயர்மென்ட் அறிவித்துவிட்டு ரோஹித் 10 ஓவர் போட்டி விளையாட தயாராகிவிட்டார்.
- ஹர்திக் பாண்டியா இடத்திற்கு ஆப்பு வைத்த தோனியின் ஏகே 47
- ஆதரவில்லாமல் டம்மியாகும் ஹர்திக் பாண்டியா
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் ஆபத்தான 5 பேர்