ROHIT-BUMRAH

ஐசிசி கூட ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரிதாக தணடனை கொடுக்கவில்லை. எனினும் அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான தண்டனையை விதித்தது. தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு ஒரு ஆண்டு விளையாட தடையும், பான்க்ராப்ட்டுக்கு 9 மாதம் தடை விதித்தது. மேலும் தடை முடிந்த பின் 12 மாதம் கழித்தே தலைமை பொறுப்புக்கு ஸ்மித், பான்க்ராப்ட் பரீசலனை செய்யப்படுவர் என்றும். வார்னர் வாழ்நாள் முழுக்க ஆஸி அணியின் கேப்டன் ஆக முடியாது என்று அறிவித்தனர்.

Steven Smith

ஆஸ்திரேலிய ஏர்போர்ட்டில் ஸ்மித் நடத்தப்பட்ட விதம், பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மனமுடைந்து அழுதது என பல காரணங்களால் ஸ்மித்துக்கு ஆதரவு தெரிவித்து பலர் கருத்து பதிவிடுக்கின்றனர்.

ரோஹித் சர்மா

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா கூறியது “ஏர்போர்ட்டில் ஸ்மித்தை கூடி சென்ற விதம், அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆட்டத்தை கண்ணியமான முறையில் ஆடுவது முக்கியமான ஒன்று தான், நான் அதை மறுக்கவில்லை. அவர்கள் செய்த தவறையும் ஒத்துக்கொண்டு விட்டார்கள். இங்கிருந்து கிரிக்கெட் போர்டின் முடிவை நான் கேள்வி கேட்பது சரி கிடையாது தான், எனினும் அவர்கள் தலை சிறந்த வீரர்கள். இந்த ஒரு செய்கையால் நாம் அவர்களை இப்படி தான் என்று முத்திரை பதித்து விட கூடாது.” என்றார்

steve smith

ஜஸ்பிரிட் பும்ரா

இந்தியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தன ட்விட்டரில் சொல்லியிருப்பது ” யாரேனும் ஒருவர் தவறு செய்து விட்டால், அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களை மறந்து விடாதீர்கள்.”