புதன்கிழமை, மார்ச் 19, 2025

முத்துவிடம் மாட்டிய ரோகினியின் அம்மா, கிரிஷ்.. விஜயாவின் ஆட்டம் ஆரம்பம், சீதா மீது அருணுக்கு வந்த காதல்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து சில சமயங்களில் தேவையில்லாத பிரச்சனையை இழுத்துட்டு வருவார் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வார்கள். அது ஒரு விதத்திலும் உண்மைதான் என்பதற்கு ஏற்ப ஹோட்டலுக்கு சாப்பிட வந்த அருணை வம்புக்கு இழுக்கும் விதமாக முத்து அவருடைய நண்பர் செல்வத்திடம் நக்கல் அடித்த நிலையில் அருண் டென்ஷன் ஆகிவிட்டார்.

அதனால் செல்வத்தின் கார் நம்பரை நோட் பண்ணி செல்வம் கார் ஓட்டிட்டு வரும்போது டிராபிக் போலீஸ் பணியில் இருக்கும் அருண், முத்துவை பழிவாங்கும் விதமாக செல்வத்தை நிப்பாட்டி ஒரு சில காரணங்களை சொல்லி ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டு விட்டார். இதை செல்வம், முத்துக்கு ஃபோன் பண்ணி சொல்கிறார். முத்து இந்த டிராபிக் போலீஸ் கொஞ்சம் திமிராக தான் இருக்கிறான். கூடிய சீக்கிரத்தில் அவனுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்று வீட்டில் வைத்து போன் பேசுகிறார்.

இதை கேட்டதும் விஜயா, நம்மளை தான் குத்தி காட்டி பேசுகிறான் என்று ஆவேசப்பட்டு திட்டி விடுகிறார். பிறகு விஜயா கடுப்பில் இருக்கும் பொழுது சிந்தாமணி போன் பண்ணி இன்னைக்கு உங்க மருமகளை டெக்ரேசன் பண்ணவிடாமல் தடுத்து விட்டால் உங்க ராஜ்ஜியம் தான். மொத்தமாக உங்களுக்கு அடிமையாகி விடுவாள் என்று போட்டுக் கொடுக்கிறார். அதன்படி வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேலைக்கு கிளம்பிய நிலையில் மீனாவும் வீட்டு வேலையை முடித்து விட்டு டெக்கரேஷன் பண்ணுவதற்கு கிளம்பி விட்டார்.

அந்த நேரத்தில் மீனாவை விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக விஜயா கைவலி வந்த போல் நடித்து மீனாவை வேலைக்காரி போல் எல்லா வேலைகளையும் வாங்கி வருகிறார். இதனால் மீனா தந்திரமாக யோசித்து வீட்டில் இருந்தபடியே டெக்கரேஷனுக்கு தேவையான எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொடுக்கிறார். அடுத்ததாக அருணின் அம்மா ஹாஸ்பிடலில் யாரும் இல்லாமல் இருப்பதால் மீனாவின் தங்கை சீதாதான் பக்கத்தில் இருந்து எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறார்.

பிறகு அருண் வந்ததும் சீதா, மீனாவுக்கு உதவி பண்ண கிளம்பிவிட்டார். அப்பொழுது சீதாவின் செயல்களை எல்லாம் பார்த்த அருணுக்கு மனதில் சீதா பற்றிய நல்ல அபிப்பிராயம் வந்துவிட்டது. அருணின் அம்மாவுக்கும் சீதாவை பிடித்து விட்டதால் அருணை மருமகளாகவும் அருணுக்கு மனைவியாகவும் கொண்டு வரலாம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அருணுக்கும் சிதா மீது காதல் வர ஆரம்பித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து கல்யாணம் நடக்கும் தருணமாக சீதா வீட்டில் பொண்ணு கேட்க போகிறார்கள்.

அப்பொழுது சகலையை பார்க்கும் சந்தர்ப்பத்தில் முத்துவும் அருனும் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள். ஆனாலும் சீதாவின் மனசில் அருணுக்கு இடம் இருப்பதால் முத்து முன்னாடி நின்று இவர்களுடைய கல்யாணத்தை நடத்தி வைத்து சகலையுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வார். அடுத்ததாக அண்ணாமலை ஸ்கூலுக்கு கிளம்பிய நிலையில் முத்து அப்பாவை ட்ராப் பண்ண ஸ்கூலுக்கு வருகிறார். அப்படி விட்டுட்டு போகும் பொழுது அங்கே ரோகினி அம்மா கிரிசை கூட்டிட்டு ஸ்கூலில் விட வருகிறார்.

அப்படி விட வரும்போது முத்து பார்த்து கிருஷ் மற்றும் ரோகினி அம்மாவிடம் பேசுகிறார். அப்பொழுது ரோகிணி அம்மா என்னுடைய மகள் எங்க கூட இங்கே இருக்கிறாள். அவள் தான் இந்த ஸ்கூலில் கிரிசை சேர்த்து இருக்கிறார் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். இந்த விஷயத்தை கிருஷ் பாட்டி, ரோகினிக்கு ஃபோன் பண்ணி சொல்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியான ரோகினி பயப்பட ஆரம்பித்து விட்டார். இனி இதன் மூலம் அடுத்து ஒரு பிரச்சினை ரோகினிக்கு வர தயாராக போகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News