புதன்கிழமை, நவம்பர் 13, 2024

முத்து மீனாவிடம் நைசாக பேசி காரியத்தை சாதிக்கும் மனோஜ் ரோகிணி.. கல்யாண நாளில் சிக்கப் போகும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் பொருத்தவரை இந்த ஷோரூமே பெருசாக்கி மிகப்பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்ற ஆசை. ரோகினிக்கு, முத்துவிடமிருந்து வீடியோவை எடுத்து சிட்டி இடம் கொடுத்து PA கொடுக்கும் டார்ச்சர் இல் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம். இதனால் இந்த இரண்டு பேருடைய ஆசையும் நிறைவேற்றும் விதமாக தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதாவது மனோஜ் ஷோரூம் அடுத்த கட்ட லெவலுக்கு போக வேண்டும் என்றால் ஒரு டீலர்ஷிப் கிடைத்தால் போதும். ஆனால் அதற்கு மனோஜ் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பணக்காரராகவும் நல்ல ஒரு வேலையில் இருக்க வேண்டும் என்ற ஒரு கண்டிஷன் இருக்கிறது. இதனால் என்ன பண்ணுவது என்று யோசித்த ரோகிணி, நம்முடைய கல்யாண நாளை மிகப்பெரிய பங்க்ஷனாக நடத்தலாம்.

அதற்கு அந்த டீலர்ஷிப்பை நடத்தும் நபரை வரவைத்து நம் குடும்பத்தில் இருப்பவர்களையும் அறிமுகப்படுத்தி அதன் மூலம் நம் பிசினஸை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போகலாம் என்று ஐடியா கொடுக்கிறார். உடனே மனோஜ், கை நிறைய பணம் சம்பாதிக்கலாம் தொழிலதிபராக மாறலாம் என்ற பேராசையில் ரோகிணி சொன்னதும் ஓகே என்று சொல்லிவிட்டார்.

ஆனால் ரோகிணி சொன்னதற்கு மறைமுகமான காரணம் என்னவென்றால் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முத்துவிடம் இருக்கும் வீடியோவை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் தான். பிறகு இவர்களுடைய எண்ணத்தை குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டும் என்று வட்டமேசை மாநாடு நடத்தி அனைவரிடமும் சொல்லிவிட்டார்கள். ஆனால் மனோஜ், ரவி மற்றும் முத்துவை தனியாக கூப்பிட்டு கெஞ்சுகிறார்.

அதாவது விவரங்கள் அனைத்தையும் சொல்லி ரவி ஒரு ரெஸ்டாரண்டுக்கு ஓனராகவும், முத்து 50 கார் வைத்து நடத்தும் டிராவல்ஸ் பண்ணுகிறார் என்பதாக பொய் சொல்ல போகிறோம். அதற்கு ஏற்ற மாதிரி உங்களுடைய தோரணையும் இருக்க வேண்டும். அதற்கு என்ன செலவாகுதோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் முத்து, அப்படி பொய் சொல்லி நாம் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்று மறுக்கிறார்.

ஆனால் மனோஜ், நான் வளர்ந்து விட்டால் நம்முடைய குடும்பமும் வளர்ந்து விடும் என்று கெஞ்சி கூத்தாடி ரவி மற்றும் முத்துவிடம் சம்மதத்தை வாங்கி விடுகிறார். இதே மாதிரி ரோகினி, ஸ்ருதி மற்றும் மீனாவை தனியாக கூப்பிட்டு கெத்தான பணக்கார வீட்டு மருமகளாக நடந்து கொள்வதற்கு கேட்கிறார். இந்த ஒரு விஷயம் சுருதிக்கு நல்லாவே செட்டாகிவிடும் அதனால் மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மீனாவிற்கு இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று யோசித்து நிலையில் ரோகிணி ஏதோ சில காரணங்களை சொல்லி மீனாவையும் சம்மதிக்க வைத்து விடுகிறார். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து நடத்த போகும் டிராமாவில் பலியாடாக முத்து மற்றும் மீனாவுக்கு பிரச்சினை கொடுக்கலாம் என்று ரோகிணி முடிவு எடுத்துவிட்டார்.

ஆனால் எதிர்பார்க்காத திருப்பம் அங்கே தான் நடக்கப்போகிறது. எப்பொழுது ரோகினி கையும் களவுமாக மாட்டப் போகிறார் என்று எதிர்பார்த்து அந்த தருணம் நெருங்கி விட்டது. அந்த வகையில் கல்யாண நாளில் ரோகினி பற்றிய விஷயங்கள் வெளிவரும் விதமாக ரோகிணி யார் என்பது அனைவருக்கும் தெரிய போகிறது. இதை தான் தனக்குத்தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது என்று சொல்வார்கள். எது எப்படியோ ரோகினி மாட்டக்கூடிய நாள் கிட்ட நெருங்கி விட்டது.

- Advertisement -spot_img

Trending News