வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

முத்துவை அழிக்க நினைத்து தலையில் மண்ணை வாரி போட்ட ரோகினி.. புது பிசினஸை ஆரம்பிக்கப் போகும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா வீட்டுக்கு வந்த பிறகு கொஞ்சம் ஓவராக தான் ஆட்டம் ஆடுகிறார் என்பதற்கு ஏற்ப மீனா குடும்பத்தில் இருப்பவர்கள் வீட்டிற்கு வரக்கூடாது. மீனாவை பார்த்து பேச வேண்டுமென்றால் வாசலில் நின்னு பேசிவிட்டு அப்படியே போய் விட வேண்டும். ஏனென்றால் வீட்டிற்குள் விட்டால் நான் போட்டிருக்கும் நகைகளையும் திருடிட்டு போனால் நான் என்ன பண்ணுவது.

அதனால் அந்த திருட்டு கும்பல் வீட்டிற்கு வரக்கூடாது என்று அனைவரது முன்னாடியும் மீனா குடும்பத்தை அசிங்கமாக பேசி விட்டார். இதெல்லாம் கேட்டு வழக்கம்போல் மீனா கண்ணீர் வடித்துக் கொண்டு அப்பாவி போல் மூஞ்சியை வைத்துக் கொண்டார். இன்னும் எத்தனை நாளைக்கு தான் மீனா இப்படி இருக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

குனிய குனிய குட்டிகிட்டே தான் இருப்பாங்க என்பதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக மீனா எல்லாத்தையும் சகித்துக் கொண்டே வருகிறார். அதனால் விஜயாவின் பேச்சு, ஆட்டமும் ஓவராக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்ததாக மீனா மற்றும் முத்து எல்லா பிரச்சினையும் முடிந்த நிலையில் மொட்டை மாடியில் மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது வாங்கிய கடனையும் மொட்டமடியில் நமக்கென்று ஒரு ரூமையும் கட்டி நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அதற்கு ஏற்ற மாதிரி மறுநாள் காலையில் மீனா, கல்யாண மேடையில் பூ மூலம் அலங்கரிக்கும் ஒரு டெக்ரேசன் பண்ணுவதை வித்யாசமாக யோசித்து அதை தற்காலிகமாக செய்து வைத்திருக்கிறார். இதை பார்த்ததும் முத்து உனக்குள் இவ்வளவு திறமை இருக்கிறது. அதை எல்லாம் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார். சுருதியும் வந்து மீனாவின் திறமையை பாராட்டும் அளவிற்கு புகழ்ந்து விட்டார்.

அத்துடன் இந்த விஷயத்தை நமக்கு மட்டும் தெரிந்திருந்தால் போதாது உங்களால் இதெல்லாம் பண்ண முடியும் என்பதற்கு ஏற்ப அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் அப்டேட் பண்ணினால் உங்களுடைய புது பிசினஸ் நல்லபடியாக வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக சுருதி பேசுகிறார்.

அடுத்ததாக ரோகிணி, விஜயா எப்படி கேஸை வாபஸ் வாங்கினார் என்பதை தெரிந்து கொள்வதற்காக பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கே பார்வதிக்கு சில பணிவிடைகளை செய்து நைசாக பேசி விஜயா, லாயரிடம் இருந்து வாங்கின இரண்டு லட்ச ரூபாய் பணத்தை பற்றி தெரிந்து கொண்டார். ஆனாலும் ரோகிணி, அந்த பணத்தை எங்கு வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னுடைய அத்தை பணத்துக்காக அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க என்று கோர்த்து விட்டு பேசுகிறார்.

உடனே பார்வதி நான் என்ன சும்மாவா சொல்ல போகிறேன் என்று ரோகினியை கூட்டிட்டு போய் பீரோலில் இருக்கும் அந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து காட்டுகிறார். அந்த நேரத்தில் ரோகினிக்கு சிட்டி போன் பண்ணி நான் கேட்ட பணத்தை இப்பொழுதே கொடுக்கணும். இல்லை என்றால் PA வின் டெட்பாடி உன் வீட்டு வாசல் முன்னாடி வந்து இருக்கும் என்று மிரட்டுகிறார்.

இதனால் பயந்து போன ரோகிணி வேற வழியில்லாமல் பார்வதியை நைசாக பேசி டைவர்ட் பண்ணி பீரோவில் இருக்கும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திருடி விடுகிறார். ஆனால் இதோடு சிட்டி விடப் போவதில்லை நிச்சயம் தொடர்ந்து ரோகினிக்கு தொந்தரவு கொடுக்கப் போகிறார்.

முத்து மீனாவின் சந்தோஷத்தை கெடுக்க நினைத்த ரோகிணி தற்போது சந்தோஷம் இல்லாமல் தன் தலையிலேயே தானே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டார். இதனால் பொய்யும் பித்தலாட்டமும் பண்ண போகும் ரோகிணி வசமாக முத்துவிடம் சிக்க போகிறார். அந்த வகையில் இனி தான் முத்துவின் ஆட்டம் ஆரம்பம் என்பதற்கு ஏற்ப நாடகம் சூடு பிடிக்க போகிறது.

- Advertisement -

Trending News