ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

நினைச்சதை சாதித்து காட்டிய ரோகினி.. சத்யாக்காக முத்து எடுக்க போகும் ரிஸ்க், அழுது புலம்பும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா என்ன சொன்னாலும் அதை சரி என்று செய்யும் முத்துவின் அலப்பறைக்கு ஒட்டுமொத்தமாக ரோகிணி முடிவு கட்டி விட்டார். அதாவது தனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் கிருஷை பார்த்து கொஞ்சம் பழகியதும் கேட்க யாரும் இல்லை தான் எடுத்து வளர்க்கலாம் என்று ஓவராக அன்பை காட்டி விட்டார் மீனா.

அதே மாதிரி மீனா என்ன சொன்னாலும் சரி என்று கிருஷை தத்து எடுத்துக் கொள்ளலாம் என முத்துவும் சரி என்று சொல்லிவிட்டார். ஆனால் இதைப் பற்றி கிரிஸ் பாட்டி என்ன நினைக்கிறார் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. தொடர்ந்து கிறிஸ் இன் பாட்டியை வற்புறுத்தும் விதமாக முத்து மற்றும் மீனா ஓவராக டார்ச்சர் பண்ணினார்கள். அதனால் தான் வீட்டில் கொலு வைத்திருக்கிறது என்று வலு கட்டாயமாக கூட்டிட்டு வந்தார்கள்.

மச்சானுக்காக முத்து எடுக்கப்போகும் ரிஸ்க்

ஆனால் க்ரிஷ் பாட்டி, வருவதற்கு முன் ரோகிணிக்கு போன் பண்ணி முத்து மற்றும் மீனா வீட்டிற்கு வந்து என்னை வற்புறுத்தி கூப்பிடுகிறார்கள். நான் எவ்வளவு மறுத்தாலும் என்னை கூட்டிட்டு போக வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார்கள் என தகவலை சொல்லிவிட்டார். உடனே இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்று ரோகினி அந்த நொடியில் ஒரு பிளானை போட்டு விட்டார்.

அந்த வகையில் மீனா மற்றும் முத்து சொன்னபடி அவர்களுடன் கிளம்பி வீட்டுக்கு வா. வந்ததும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களை அவமானப்படுத்தி பேசும் விதமாக பேசிவிட்டு சண்டை போட்டு இனி க்ரிஷ் பக்கத்தில் அவர்கள் வராதபடி நீ அசிங்கப்படுத்திவிட்டு பேசிரு என்று பக்கவாக பிளான் போட்டு கொடுத்து விட்டார்.

அதன்படி கொலு பூஜை நடந்து கொண்டிருக்கும் பொழுது முத்து மற்றும் மீனா கிரிசை தன் மடியில் வைத்துக்கொண்டு அவர்கள் பிள்ளை போல் பேசிக்கொண்டு தத்தெடுப்பதை எதார்த்தமாக சொல்லிவிட்டார்கள். இதை பார்த்து ரோகிணி, அம்மாவுக்கு சிக்னல் கொடுத்துவிட்டு சண்டை போட சொல்லிவிட்டார்.

உடனே ரோகிணி அம்மா, என் பிள்ளைக்கு நான் இருக்கிறேன் அவனுடைய அம்மா இருக்கிறார். எதற்கெடுத்தாலும் தத்தெடுக்கிறேன் என்று அனாதை பிள்ளை மாதிரி பேச வேண்டாம். இனி எங்க விஷயத்துல தலையிட வேண்டாம் ரொம்ப ஓவராக போறீங்க என்று வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு கிருஷை கூட்டிட்டு போய் விட்டார். இதனால் வீட்டில் இருப்பவர்கள் முன் அவமானப்பட்ட மீனா மற்றும் முத்து எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து போய்விட்டார்கள்.

இதை நினைத்து நினைத்து மாடியில் மீனா அழுது கொண்டு முத்து இடம் புலம்புகிறார். முத்து எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் மீனா கேட்காமல் அழுது கொண்டே இருக்கிறார். இதை பார்த்த விஜயா மற்றும் ரோகினி ஜாடமடையாக மீனாவை மட்டம் தட்டி பேசி இன்னும் அதிகமாக காயப்படுத்தி விட்டார்கள். இதற்கு இடையில் ரோகிணி, வித்யா வீட்டிற்கு போகிறார்.

ஏனென்றால் அங்கே தான் ரோகிணி அம்மா மற்றும் க்ரிஷ் இருக்கிறார்கள். ரோகிணி வந்ததும் க்ரிஷ் பாட்டி முத்து மற்றும் மீனாவை ரொம்பவே காயப்படுத்தி பேசினது நினைத்து பீல் பண்ணுகிறார். ஆனால் ரோகிணி இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இப்பொழுது தான் எனக்கு மனது திருப்தியாக நிம்மதியான தூக்கம் வரும். எதுக்கெடுத்தாலும் நான் தத்தெடுக்க போகிறேன் என்று மத்தவங்க விஷயத்தில் மூக்கு நுழைத்த முத்து மற்றும் மீனாவிற்கு இது தேவைதான்.

இனியாவது என் பிள்ளை விஷயத்தில் தலையிட மாட்டார்கள். அதுவரை எனக்கு நிம்மதி என்று அம்மாவிடம் பேசி ஆறுதல் பண்ணிவிட்டு போகிறார். இதனை அடுத்து முத்து, மீனாவை கூட்டிட்டு அவருடைய அம்மா வீட்டுக்கு போகிறார். போனதும் நடந்த விஷயத்தை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அத்துடன் அங்கே வந்த சத்தியா அழுது கொண்டே என்னால் இனி காலேஜில் எக்ஸாம் எழுத முடியாது என்று சொல்கிறார்.

உடனே மீனா, ஏன் என்னாச்சு என்று கேட்கும் பொழுது நான் காலேஜுக்கு சரியாக போகாததால் என்னால் எக்ஸாம் எழுத முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என சொல்லி அழுகிறார். இதை பார்த்த முத்து, சத்யாவுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பேசி நீ கண்டிப்பாக எக்ஸாம் எழுதுவ. அதற்கு நான் பொறுப்பு என்று மச்சானுக்காக அதிக அளவில் ரிஸ்க் எடுத்து காலேஜில் பேசப் போகிறார்.

அந்த வகையில் சத்யா மற்றும் முத்துவின் பாசத்தை பார்த்த மீனா ஆனந்த கண்ணீர் வடித்து விட்டார். ஆனால் இதற்கிடையில் ரோகினி இன்னும் என்ன தில்லாலங்கடி வேலை பார்க்கப் போகிறாரோ? முத்துவுக்கு எந்த அளவுக்கு பிரச்சனை வரப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News