செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

மீனாவின் வாழ்க்கையை காலி பண்ணிய ரோகினி.. சிக்கலில் சிக்கிய முத்துவின் மச்சான், ராட்சசியாக மாறிய விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவின் ஆணவத்திற்கும், திமிருக்கும் ஒரு நாள் மொத்தமாக அடங்கப் போகிறார் என்பதற்கு ஏற்ப ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவரும் பொழுது விஜயாவின் ஒட்டுமொத்த திமிரு அடங்கிவிடும். அதுவரை ஓவராக தான் விஜயா துள்ளிக் கொண்டிருப்பார் என்பதற்கு ஏற்ப மீனா குடும்பத்தின் வறுமையை காட்டி மீனாவை மட்டம் தட்டி ஏளனமாக பேசிக் கொண்டே வருகிறார்.

அதுவும் யார் இருக்கிறார்கள் யாரிடம் சொல்கிறோம் என்பது கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு கண்மூடித்தனமாக மீனாவை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் மீனாவுடன் சேர்ந்தும் பூக்கட்டும் தோழிகளுக்கு விஜயா கொஞ்சம் கூட மரியாதை கொடுத்து பேசாமல் மீனாவையும் அசிங்கப்படுத்தி பேசி விடுகிறார். ஆனாலும் மீனாவின் தோழிகள், விஜயாவிடம் நீங்கள் என்னதான் மீனாவை அசிங்கப்படுத்தி பேசினாலும் உங்களுக்கு முடியாமல் இருக்கும் பொழுது மீனா மட்டும் தான் பார்த்துக் கொள்வாள் என்று சொல்கிறார்.

ஆனாலும் விஜயா இதை கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார். அடுத்ததாக போன் இல்லாமல் சவாரிக்குப் போன முத்துக்கு மீனாவின் ஞாபகம் வந்ததால் அங்கு இருப்பவர்களிடம் ஃபோன் வாங்கி பேசுகிறார். அப்பொழுது ஏதோ ஒரு ஆபத்து வருவது போல் தோன்றுகிறது என மீனா, முத்துவிடம் சொல்கிறார். அதெல்லாம் ஒன்னும் ஆகாது நம்ம நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று ஆறுதல் படுத்துகிறார்.

அடுத்ததாக மீனாவை பார்ப்பதற்கு சத்யா வருகிறார். இருவரும் சேர்ந்து போன் கடைக்கு சென்று முத்துவுக்காக ஒரு நல்ல போனை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சத்யாவை பற்றிய வீடியோ வெளிவருகிறது. இதை கடையில் இருப்பவர்கள் பார்த்துக் கொண்டு இப்ப வந்துட்டு போனவன் திருட்டு பையன், பணத்தை திருடி இருக்கிறான் என்று பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால் இது எதுவும் தெரியாத சத்தியா, மீனாவிடம் நீ வீட்டுக்கு போ நான் போனுக்கு சிம் வாங்கிட்டு வருகிறேன் என்று சொல்லி கடைக்கு போகிறார். இதனை தொடர்ந்து விஜயா டான்ஸ் பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மீனாவின் தோழிகள் சொன்ன விஷயத்தைப் பற்றி பார்வதியிடம் புலம்புகிறார். இதற்கிடையில் ரோகிணி தோழி வித்தியா, சமூக வலைதளங்களில் மீனாவின் தம்பி திருடின வீடியோ வெளிவந்து விட்டது என்று சொல்லி அந்த வீடியோவை காட்டுகிறார்.

உடனே ரோகிணி, விஜயா இருக்கும் பார்வதி வீட்டிற்கு வருகிறார். உங்களிடம் பணத்தை யாரு திருடினார் என்ற விஷயம் தற்போது வெளிவந்திருக்கிறது என்று சொல்லி அந்த வீடியோவை காட்டுகிறார். அந்த வீடியோவில் இருப்பது மீனாவின் தம்பி என்று விஜயாவிற்கு தெரிந்ததும் ராட்சசியாக மாறி மீனாவின் வீட்டிற்கு ரோகிணியை கூட்டிட்டு போகிறார்.

அங்கே போனதும் கண்ணா பின்னான்னு மீனாவின் தம்பியை அடித்து அசிங்கப்படுத்துகிறார். இதையெல்லாம் ரோகிணி வேடிக்கை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். அந்த அளவிற்கு தன்னுடைய வாழ்க்கையை மட்டும் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு சைக்கோவாக மாறிவிட்டார். இந்த பிரச்சனையால் முத்து மற்றும் மீனாவிற்கு தொடர்ந்து பிரச்சினைகள் வரப்போகிறது. ஆனால் இதன் பிறகுதான் ரோகினிக்கு ஆப்பு இருக்கிறது என்பதற்கு ஏற்ப முத்து ஒவ்வொரு விஷயங்களையும் கண்டுபிடிக்க போகிறார்.

- Advertisement -

Trending News