ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

மனோஜிடமிருந்து போனை எடுக்க அல்லல் படும் ரோகிணி.. முத்து வைத்த ட்விஸ்ட், கல்யாணிக்கு ஆரம்பித்த கெட்ட நேரம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஏற்பாடு பண்ணின நிகழ்ச்சியில் முத்து குடிக்காமல் நல்ல பிள்ளையாக தான் இருந்தார். ஆனால் மனோஜ் மற்றும் ரவி சேர்ந்து குடித்து பண்ணின ரகளை, முத்துவை வற்புறுத்தியதுதால் முத்துவும் குடித்துவிட்டார். உடனே இதுதான் சான்ஸ் என்று ரோகிணி, முத்துவிடம் இருந்து போனை எடுத்து மனோஜ் பாக்கெட்டில் வைத்து விட்டார்.

பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில் அண்ணாமலை, 3 பசங்கள் நிதானம் இல்லாமல் குடித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் கோபத்தில் அவர்களை திட்டி தண்டனை கொடுக்கும் விதமாக வெளியே படுக்க வைத்து விட்டார். இதனால் முத்து, மனோஜ் மற்றும் ரவி உள்ளே வர முடியாமல் வெளியே புலம்பிக்கொண்டு படுக்கிறார்கள்.

ஆனால் ரோகிணி எப்படியாவது மனோஜிடம் இருந்து போன் எடுக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை இடம் அவங்க ட்ரெஸ் மட்டுமாவது மாத்திட்டு போய் தூங்கட்டும் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் காலையில் பார்த்துக்கலாம் என்று சொல்லி கதவை சாத்தி விடுகிறார். பிறகு எப்படியாவது எல்லாரும் தூங்குனதுக்கு பிறகு போனை எடுக்க வேண்டும் என்று ரோகினி முழித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக முத்து தண்ணீர் தாகம் எடுக்க என்று கதவை தட்டுகிறார். கதவை திறந்த மீனா தண்ணி கொடுத்துவிட்டு முத்துவிடம் பேசுகிறார். பிறகு முத்துவும் எனக்கு தூக்கம் வரவில்லை என்னுடன் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு போ என மீனாவுடன் உட்கார்ந்து வெளியே பேசிக் கொள்கிறார். இதனால் அவ்வப்போது கதவைத் திறந்து வந்து பார்த்த ரோகினி ஃபோன் எடுக்க முடியாமல் புலம்புகிறார்.

பிறகு வித்யா, ரோகினிக்கு போன் பண்ணி போன் எடுத்தியா என்று கேட்கிறார். இல்ல அவங்க மூன்று பேரும் வெளியில் தூங்குகிறார்கள் என்னால போன் எடுக்க முடியவில்லை.. முத்துவும் மீனவும் தூங்காமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உடனே ஆர்வக்கோளாறு வித்தியா அப்படி அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என கேட்கிறார். உடனே கோபப்பட்ட ரோகிணி, நீ வேர நானே போன் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

தேவையில்லாமல் பேசி நீ என் கோபத்தை கூட்டாதே என்று சொல்லிப் போனை கட் பண்ணுகிறார். இதனால் விடிய விடிய உட்கார்ந்து தூங்காமல் கடைசி நேரத்தில் ரோகிணி தூங்கி விடுகிறார். பிறகு மறுநாள் காலையில் பார்க்கும் பொழுது மனோஜ் பாக்கெட்டில் இருந்த போன் மிஸ் ஆகிருக்கும். ஆனால் அதை யாரிடமும் சொல்ல முடியாமல் ரோகிணி கடைசி வரை அந்த போனை தேடிக் கொண்டு அல்லல்பட போகிறார்.

பிறகு முத்து அவருடைய போனை காணும் என்று தேடிய நிலையில் வீட்டிற்கு வெளியே தான் கிடைக்கும் என்று முத்து அந்த போனை எடுத்து விடுவார். பிறகு என்னைக்கா இருந்தாலும் சத்யாவின் வீடியோ நம் ஃபோனில் இருப்பது டேஞ்சர் தான் என்று நினைத்து முதலில் சத்யாவின் வீடியோவை டெலிட் பண்ணி விடுவார். இது எதுவும் தெரியாத ரோகிணி கடைசியில் வீடியோ இல்லாமல் ஏமாறப்போகிறார். இனி அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கி சின்னாபின்னமாக போகிறார்.

- Advertisement -spot_img

Trending News