Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ்க்கு வந்த மொட்டைக் கடிதாசி மூலம் மிகவும் பயத்துடன் புலம்பி தவிக்கிறார். இதனால் இதை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் விஜயாவிடம் சொல்லி லெட்டர் காட்டுகிறார். விஜயா இந்த லெட்டரை பற்றி பெருசாக கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டார். ஆனால் மனோஜ், விடாமல் அந்த லெட்டரில் எழுதியபடி சில சம்பவங்களை சொல்லி விஜயாவை பயப்பட வைத்துவிட்டார்.
இதனால் இரண்டு பேரும் பயத்தில் இருக்கும்பொழுது ரோகிணி, மொட்டை மாடிக்கு வந்து என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அப்பொழுது நடந்த விஷயத்தையும், மொட்ட கடுதாசித்தையும் ரோகிணி கையில் கொடுத்து விஷயத்தை சொல்கிறார். இது யாரோ பணம் பறிப்பதற்காக உன்னை ஏமாற்றுகிறார்கள். இதை நினைத்து நீ கவலைப்பட வேண்டாம் என்று ரோகிணி சொல்கிறார்.
முத்து மீனாவுக்கு ஏற்படும் மனஸ்தாபம்
அதற்கு மனோஜ், அந்த திருடனை பற்றி நான் விசாரித்து விட்டேன் இப்பொழுதுதான் ஜெயிலில் இருந்து வந்திருக்கிறான். வந்ததும் என்னுடைய ஷோரூம் வந்து என்னை மிரட்டிக்கொண்டு வருகிறான் என்று சொல்கிறார். அந்த வகையில் ரோகிணி இந்த மொட்டை கடுதாசியை போட்டு யார் பயமுறுத்துகிறார் என்பதை தெரிந்து கொண்டார்.
அதாவது ரோகினி பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டு அவ்வப்போது பிளாக்மெயில் பண்ணி பணத்தை பறித்துக் கொண்டிருக்கும் அந்த நபர் தான் ரோகிணி சந்தோஷத்தை பறிக்க வேண்டும் என்பதற்காக மனோஜ் மூலம் காய் நகர்த்துகிறார் என்பதை ரோகிணி புரிந்து கொண்டார். ஆனால் இதைப் பற்றி வெளியே சொல்ல முடியாததால் மனோஜிடம் இதைப் பற்றி நீ பெரிசாக எடுத்துக் கொள்ளாத. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஷோரூம் வெளியே செக்யூரிட்டி போட்டுக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.
அதன்படி விஜயா மற்றும் மனோஜ் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டது என்று நிம்மதியாக தூங்கப் போகிறார்கள். இதனை அடுத்து முத்து மற்றும் மீனா இருவருமே ஒருவருக்கொருவர் தெரியாமலேயே நடுத்தெருவில் இருக்கும் முதியவர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது தற்போது புரிந்து விட்டது. அதாவது அந்த முதியோர்களுக்கு ஒரு சின்ன கடையை போட்டு வியாபாரம் நடத்துவதற்கு முத்து தான் ஆரம்பத்தில் உதவி செய்திருக்கிறார்.
அவர்களுக்கு தான் தற்போது மீனா சாப்பாடு கொடுத்து பசியாற்றி இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. இதனை தொடர்ந்து முத்து நண்பருக்கு பணம் தேவைப்படுவதால் மது அருந்திவிட்டு வேதனையுடன் முத்துவிடம் புலம்புகிறார். உடனே முத்து, பணம் தான் பிரச்சனை என்றால் அதை நான் தருகிறேன் என்று மீனாவிடம் கேட்காமல் வாக்குறுதி கொடுத்து விடுகிறார்.
பிறகு வீட்டில் இருக்கும் பணத்தை கேட்டு மீனாவிடம் பிரச்சினை பண்ணுகிறார். ஆனால் மீனா இது நாம் இருவரும் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த தம்பதிகளுக்கான கிடைத்த பணத்தொகை. அதனால் அதை தர முடியாது என்று முத்துவிடம் வாக்குவாதம் பண்ணுகிறார். இதற்கிடையில் ரோகிணி, கிரிஷ் மற்றும் அம்மாவை சென்னையில் தங்க வைப்பதற்காக ஒரு வீடு பார்த்து வைத்து விட்டார்.
அந்த வீட்டுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வாடகையும், அட்வான்ஸ் தொகையாக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி பண்ணுகிறார்கள். இதனால் பணத்துக்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ரோகிணி, முத்து மற்றும் மீனா இவர்கள் சம்பந்தமாக ஏதோ பண பிரச்சனை நடக்க வாய்ப்பு இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மனோஜை மறைமுகமாக டார்ச்சர் பண்ணும் ஜீவா
- மனோஜ்க்கு கொலை மிரட்டல் கொடுத்து பயமுறுத்திய வேலை ஆட்கள்
- விஜயாவுக்கு சாப்பாடு மூலம் ஆப்பு வைத்த மீனா