மனோஜின் வீக்னெஸ் பாய்ண்ட் வைத்து தப்பித்த ரோகினி.. கிரிஷை பார்க்க போகும் மீனா, முத்துவுக்கு வரும் சந்தேகம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஒரு வழியாக பேயாட்டம் ஆடிய மீனாவை முத்து சமாதான கொடி மூலம் அல்வா கொடுத்து சமரசம் செய்து விட்டார். பிறகு அவர்களுக்குள் இருக்கும் ஒரு தனி அறையில் சென்று இருவரும் அல்வாவை ஊட்டி ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பிறகு ரோகிணி எல்லா தில்லாலங்கடி வேலையும் பார்த்துட்டு எப்படி மனோஜை சமாளிக்கலாம் என்ற விஷயத்தையும் தெரிந்து வீட்டிற்குள் நுழைகிறார்.

அதன்படி மனோஜ், ரோகிணியே சந்தேகப்பட்டு என்னிடம் பொய் சொல்லி விட்டு எங்கே போனாய். என்னிடம் ஏதோ மறைக்கிறாய் எனக்கு இப்பவே என்னன்னு தெரிஞ்சாகணும் என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி நீ என்னை சந்தேகப்படுகிறாயா என்று மனோஜை மடக்கும் அளவிற்கு கேள்வி கேட்கிறார். ஆனாலும் மனோஜ் பிடி கொடுக்காமல் ரோகிணியை தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

கிரிஷை பார்க்க போகும் மீனா, அதிர்ச்சியில் ரோகினி

பிறகு மனோஜின் வீக்னஸ் பாயிண்ட்டான ஜோசியர் நம்பிக்கை என சொல்லி கருங்காலி மாலை உனக்காகத்தான் வாங்க நான் ஜோசியரை பார்க்கப் போனேன். சர்ப்ரைசா கொடுக்கலாம் என்பதற்காகத்தான் நான் உன்னிடம் பொய் சொல்லிட்டு போனேன் என்று கருங்காலி மாலையை காட்டுகிறார். உடனே மனோஜ், உனக்கு தான் இதன் மேல் நம்பிக்கை கிடையதே, நீ ஏன் எதற்காக வாங்க வேண்டும் என்று கேட்கிறார்.

எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் உனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே மாதிரி நீ தினமும் கலர் கலர் சட்டையாய் போட்டு ஜோசியர் சொன்னபடியே செய்து வருவதால் நல்லது தான் நடக்கிறது. அதனால் தான் இன்னும் உனக்கு நல்லது நடக்க வேண்டும் எடுத்த காரியத்தில் லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த கருங்காலி மாலையை நான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி மனோஜின் வீக்னஸ் பாயிண்டை வைத்து தப்பித்து விட்டார்.

மனோஜும் ரோகினி சொல்வதை கண்முடித்தனமாக நம்பி விட்டார். பிறகு கிராமத்தில் இருக்கும் பாட்டி வேர்க்கடலையை நாலு மூட்டையில் அனுப்பி வைத்திருக்கிறார். இதை பார்த்ததும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு கொடுக்க வேண்டியதற்காக எடுத்துட்டு போறதாக சொல்கிறார்கள். அப்பொழுது அண்ணாமலை, மீனாவிடம் நீயும் எடுத்துட்டு உன் குடும்பத்தில் கொடு என்று சொல்கிறார்.

அதற்கு மீனா, என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் எனக்கு வேணும் என்று கேட்கிறார். அப்பொழுது வேறு யாருக்கு என்று கேட்கும் பொழுது நான் கிரிஷை பார்த்துட்டு அவங்க பாட்டியிடம் கொடுத்துட்டு வருகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகினி அதிர்ச்சியாகி பயப்பட ஆரம்பித்து விடுகிறார்.

ஏனென்றால் மீனா அங்கே போனால் மறுபடியும் தேவை இல்லாத பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் மீனாவுடன் சேர்ந்து முத்துவும் போகப்போவதால் ரோகிணி அம்மா உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயம் தெரிந்து விடும்.

அதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் குழப்பங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் கிரிஷ் தனியாக இருக்க வேண்டாம் என்று மீனா வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். அப்படி வந்து விட்டால் ரோகிணி மற்றும் கிரிஷ் மூலம் நடக்கும் விஷயங்களை வைத்து முத்துவுக்கு சந்தேகங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -