
Robo Shankar : ரோபோ சங்கர் மற்றும் பிரியங்கா தம்பதியினரின் செல்லப் பிள்ளையான இந்திராஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. பெரிய நட்சத்திரங்களில் செய்யாத அளவுக்கு மிகவும் ஆடம்பரமாக இந்திரஜாவின் கல்யாணத்தை நடத்தி முடித்திருந்தார் ரோபோ சங்கர்.
மேலும் கிட்டத்தட்ட ஒரு மாதமாகவே யூடியூப் ஊடகங்களில் இந்திரஜா மற்றும் கார்த்திக் திருமண வீடியோக்கள் தான் வலம் வந்தது. இந்நிலையில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு இந்திராவுக்கும் கார்த்திக்கும் 16 வயது வித்தியாசம் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து இந்தக் கேள்வி இந்திரஜா எங்கு சென்றாலும் வைக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ரோபோ ஷங்கர் குடும்பம் ஒரு ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குரேஷி தொகுப்பாளராக இருந்தார்.
கோபப்பட்ட இந்திரஜாவை சமாதானப்படுத்திய ரோபோ சங்கர் மனைவி
அப்போதும் 16 வயது வித்தியாசம் என்று குரேஷி வாயை எடுத்த நிலையில் கடப்பான இந்திராஜா அங்கிருந்து கிளம்ப முற்பட்டார். அவரது அம்மா பிரியங்கா சமாதான படுத்தினார். இதே போல் நிறைய பேர் கேக்குறாங்க அவங்களுக்கு நம்ம பதில் சொல்லி ஆகணும் என்று கூறினார்.
அதாவது இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவருக்கும் 9 வயது வித்தியாசம் தானாம். 16 வயது என்று தவறாக வெளியில் பரவி வருகிறது. மேலும் பேசிய பிரியங்கா என்னுடைய அம்மா மற்றும் அப்பாவுக்கு கிட்டத்தட்ட 15 வயது வித்தியாசம்.
கடைசி வரை இருவருமே சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆகையால் திருமணத்தில் மனசு தான் முக்கியமே தவிர வயது இல்லை என்று பிரியங்கா குறிப்பிட்டிருந்தார்.