fbpx
Connect with us

தளபதி 63யில் நடிக்கப்போகும் பிரபல காமெடி நடிகரின் மகள். அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.

vijay-63-stills

News | செய்திகள்

தளபதி 63யில் நடிக்கப்போகும் பிரபல காமெடி நடிகரின் மகள். அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.

விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். விரைவில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயினாக நயன்தாரா, காமெடியனாக யோகி பாபு. முக்கிய ரோலில் கதிர் போன்ற அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி ரெடியாகும் படம் என்றும் சொல்லப்படுகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இப்படம் பற்றிய அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளது.

tmja

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதனை பிரியா அட்லி விளக்கேற்றி துவக்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரோபோ ஷங்கர்

அப்பொழுது பல விஷயங்களை பேசிய ரோபோ ஷங்கர் இந்த சுவாரசியமான தகவலையும் பகிர்ந்தார். இயக்குனர் அட்லி அவர்கள் அனுமதியோடு சொல்றேன் என கூறிய அவர், ” தளபதி விஜய் படத்தில் நடிக்கப் போறவங்க தேர்வு நடந்து வருது. அதில் என் மகள் நடிக்க தேர்வாகி இருக்கிறார். முன்பே பல வாய்ப்புகள் வந்த சமயத்தில் படிப்பு முக்கியம் என தவிர்த்தேன். ஆனால் அட்லி விஜய் கூட்டணியில் நடிக்க வாய்ப்பு வந்தால் விட முடியுமா ? அதான் எப்ப தேதி கேப்பார்னு காத்திருக்கிறேன்’ என்று சொல்லி முடித்தார் ரோபோ ஷங்கர்.

Indrajaa

அவரின் இரண்டு மகள்களில்  மூத்த மகள் இந்திரஜா தான் என்று நாம் நினைக்கிறோம். காத்திருப்போம் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top