Robo Sankar and Indiraj: சோசியல் மீடியாவை இப்பொழுது ஓப்பன் பண்ணினாலே ரோபோ சங்கரின் மகளின் கல்யாணத்தில் நடக்கும் விஷயத்தையும் தான் பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஓவர் அலப்பறையை கூட்டும் விதமாக ஒவ்வொரு விஷயங்களையும் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணி வருகிறார்கள்.
காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜ் அவருடைய மாமனை காதலித்து கரம் பிடித்து விட்டார். இந்நிலையில் கல்யாணத்துக்கு முன்னாடி நடக்கும் Haldi பங்க்ஷன் மற்றும் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்த கிடா விருந்து போன்ற அனைத்து சாஸ்திரம் சம்பிரதாயங்களையும் யூட்யூப் மூலமாக போட்டு வருகிறார்கள்.
அத்துடன் மகளின் கல்யாணத்துக்காக ரோபோ சங்கர் அவருடைய சக்திக்கு மீறி சீர்வரிசையை சீதனமாக செய்து வருகிறார். அதாவது மகள் இந்திராஜாவுக்கும் மாப்பிள்ளை கார்த்திக்கும் திருமண பரிசாக 19 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா எலிவேட் காரை பரிசாக கொடுத்திருக்கிறார்.
மகளை தங்கத்தாலே அலங்கரித்த ரோபோ
ஏற்கனவே திருமணத்தின் போது ரோபோ சங்கர் தங்க ஜரிகையால் செய்யப்பட்ட பட்டுப் புடவையை பரிசாக கொடுத்திருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்தது. அத்துடன் அதிக அளவில் நகைகளை போட்டு மகளை தங்கத்தாலேயே அலங்கரித்து இருந்தார்.
அதன் பின் மதுரையில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு சென்று அங்கு உள்ள அனைவருக்கும் கெடா விருந்து போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் யாரும் மதுரைக்கு போய் தம்பதிகளை வாழ்த்த முடியாததால் சென்னைக்கு வந்த பிறகு இவர்களுடைய வரவேற்பை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பொதுவா பெண் குழந்தைகள் தான் அந்த வீட்டிற்கு கிடைத்த மகாலட்சுமி என்று சொல்வார்கள். அதே போல இந்திராஜா வந்த பிறகுதான் ரோபோ சங்கருக்கு அதிர்ஷ்டமே கொட்டியதாக ரோபோ சங்கர் மனைவி கூறியிருந்தார். அந்த வகையில் குடும்பத்தில் உள்ள ஐதீகம் படி இந்திராஜாவிடம் பணத்தை கொடுத்து அதை மடியில் ஏந்தி பூஜை ரூமில் வைத்து வணங்கியும் வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இன்னும் கல்யாண அலப்பறை முடியலை என்பதற்கேற்ப தொடர்ந்து இவர்களுடைய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டி வருகிறது.