Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொன்னதை செய்த ரோபோ ஷங்கர்! தல அஜித்துடன் செலஃபீ ! விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !
ரோபோ ஷங்கர்
மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் என்று இருந்தவர், படிப்படியாக முன்னேறி இன்று காமெடியனாக சினிமாவில் தடம் பதித்துள்ளார். சிறு சிறு ரோல் சிரிக்க வைக்கும் காமெடி என்று பல படங்களில் மனிதர் ஏகத்துக்கு பிஸி. மாரி படத்தில் தான் தனுஷ் போன்ற முன்னணி நடிகருடன் படம் முழுக்க நடிக்க வாய்ப்பு இவருக்கு அமைந்தது. அதனை தொடர்ந்து விசுவாசம் படத்தில் அஜித்துடன் படம் நெடுக கூடவே வரும் கதாபாத்திரம் இவருக்கு மீண்டும் அமைந்துள்ளது. இப்படத்திற்காக மொத்தம் 50 நாள் கால் – ஷீட் கொடுத்துள்ளாராம் ரோபோ.
விசுவாசம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் சிவா- அஜித் இணையும் படம். இப்படத்தில் காமெடிக்கு தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர். முன்பே அஜித் படத்தில் நடைபாதை பற்றி ஆர்வம் மிகுதியில் பேட்டி கொடுத்தார் ரோபோ. மேலும் அப்பொழுது அவர் அளித்த பேட்டியில் ..
தல கூடவே 50 நாள் ஷூட்டிங்கில இருக்கப் போறோம். இதைவிட என்ன உற்சாகம் வேணும். அவரை மாதிரி நான் மிமிக்ரிகூட பண்ணதில்லை. உண்மைய சொல்லணும்னா இது வரைக்கும் அவரை நான் நேர்ல பார்த்ததில்லை. ஷூட்டிங் ஸ்பாட்லதான் பார்ப்பேன்னு நினைக்கிறேன்.அஜித் சாரைப் பார்த்தவுடனே கட்டிப்பிடிச்சு ஒரு செல்ஃபி எடுக்கணும்.’ என்றார்.
அன்று சொன்னதை இன்று செலஃபீ எடுத்து நிறைவேற்றி விட்டார்.
