காமெடியனாக இருந்து ஹீரோ ஆன பிரபலங்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சென்று கலக்கியவர்கள். இருவரும் டயமிங் காமெடியில் அசத்துபவர்கள்.

velaikkaran

இந்த வாரம் இவர்கள் இருவரின் படத்துக்கும் தான் நேரடி போட்டி. வேலைக்காரன் மற்றும் சக்கபோடு போடு ராஜா இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இப்படங்கள் இரண்டிலும் காமெடியனாக ரோபோ ஷங்கர்.
velaikaran

இந்த இரண்டு ஹீரோக்களை போல நம் ரோபோ ஷங்கரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் தான்.

ரோபோ ஷங்கர் தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் ஒன்றை தட்டி விட்டார் ” வேலைக்காரன் சக்கபோடு போடு ராஜா இரண்டு படங்களிலும் நான் என் வேலையே சிறப்பாக செய்துள்ளேன். உங்கள் ஆதரவை எனக்கு அளிக்கும் விதமாக படத்தை திரை அரங்கில் பாருங்கள். என் நடிப்பை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.” என்று தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.


உடனே அவர்களும் ரோபோவின் நடிப்பை பாராட்டி தங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்தனர். அதில் சில சாம்பிள் பதில்கள் உங்கள் பார்வைக்கு.

சினிமா பேட்டையின் சார்பிலும் வாழ்த்துக்கள் ரோபோ. நகைச்சுவை நடிகர் என்பதை கடந்து இந்த 2018 இல் குணச்சித்திர நடிப்பிலும் நீங்கள் கலக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.