robin hood

இந்த ஆண்டு ஹாலிவூட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. நடிகர் லியனார்டோ டி கார்பியோ இணைந்து இப்படத்தை தயாரித்தும் படத்தின் மீதான நம் எதிர்பார்ப்பை அதிகரித்தது. பல வருடங்களாக டிவியில் கலக்கிக்கொண்டிருந்த ஓட்டோ பாத்ருஷ்டி இயக்கியுள்ள படம்.

டரோன் ஏக்ர்ட்டன் ராபினாக, ஜேமி போக்ஸ் அவரின் ஆலோசகர் மற்றும் குருவாக நடித்துள்ளனர். படத்தினை துவங்கும் முன்பே நீங்கள் இதுவரை கேட்டு, படித்த கதைகளை மறந்து விடுங்கள் என்ற அறிவிப்பு வந்துவிடுகிறது.

கதை

பணக்கார வாலிபனாக ராபின். அவர் காதல் கை கூட ஜாலியாக தன் மானேஷனில் வசித்து வருகிறார். அந்த நேரத்தில் நோட்டிங்காமின் நகர ஷெரிப் போரில் பங்கேற்க ஆணை பிறப்பிக்கிறார்.

robinhood

சண்டை நடக்கும் பாலைவனம், அங்கு மனசாட்சியுடன் நடப்பதால், உடன் இருப்பவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். கைதி ஒருவனின் மகனை காக்க முயல, அங்கிருந்து சொந்த ஊர் அனுப்பப்படுகிறார்.

வந்து பார்த்ததும் இவர் போரில் வீர மரணம் அடைந்ததாக சொல்லி இவரின் சொத்துக்களையும் அரசு கை பற்றி விடுகிறது. மனைவி மறுமணம் செய்ய கடுப்பாகிறார் ராபின். அப்பொழுது அவரை அழைத்து ட்ரைனிங் கொடுத்து ஷெரிஃக்கு எதிராக போராட ரெடி செய்கிறார் ஜேமி. பகல் நேரத்தில் ராபினாக இரவு நேரத்தில் ஹூட் அனிதா திருடனாக மாறுகிறார்.

அதிகம் படித்தவை:  42 நாள் தொடர் ஷூட்டிங்கிற்கு பின் முடிவடைந்தது மிஸ்டர். சந்திரமௌலி படபிடிப்பு ! போட்டோ ஆல்பம் உள்ளே !

அதன் பின் எவ்வாறு ஷெரிப் அவர்களை அழிக்கிறார், மக்களின் அனபை பெறுகிறார், தான் இழந்த காதலை மீட்டாரா என்பதே மீதி கதை.

சினிமாபேட்டை அலசல்

பாமரனுக்கும் தெரிந்த கதையா படமாக்குவது எப்பவுமே ரிஸ்க் தான். அதனை ரஸ்க்கு சாப்பிடுவது போல நினைத்து சற்றே விக்குகின்றது இந்த டீம். சூப்பர் ஹீரோ போல ராபினை சித்தரித்துள்ளார் இயக்குனர். கோத்தமில் உள்ள பேட்மேனை தூக்கி அந்த கால இங்கிலாந்தில் வைத்தது போல உள்ளது.

அசத்தல் ஸ்டண்ட்ஸ், சூப்பர் மேக்கிங், அருமையான இசை மற்றும் நடிப்பு என அனைத்துமே ப்ளஸாக இருப்பினும் எதோ ஒரு நெருடல் ஏற்படுகிறது.

அதிகம் படித்தவை:  மகன் விஷயத்தில் இனிமேலாவது மூக்கை நுழைக்காமல் இருப்பாரா கேப்டன்?
Robin Hood

சொதப்பல்ஸ்

முதல் பார்ட் தானே, மீதியை அடுத்ததில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து விட்டனரா என புரியவில்லை. ஏழைகளின் கஷ்டமாகட்டும் , ராபினின் காதலாகட்டும், அவரின் ஆலோசகரின் பழி வாங்கும் வெறியாகட்டும், ஷெரீபின் கனவு என எதுவும் நம் மனதில் நிற்கவில்லை. இதுவே படத்தின் பெரிய மைனஸ்.

ராபினின் நெருங்கிய நபர் அடுத்த பார்ட்டில் வில்லனாக வரப்போகிறார் என்ற முடிவு ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டவில்லை, சற்றே சலிப்பையே ஏற்படுத்துகின்றது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்

ஆகமொத்தத்தில் தமிழில் நல்ல படங்கள் இந்தவாரம் ரிலீஸ் இல்லை, எனவே இங்கிலீஷில் ஆக்ஷன் படம் பார்க்க விரும்பினால் நீங்கள் ஹாப்பியாக வீடு திரும்பலாம். அப்படியின்றி கார்ட்டூனில் பார்த்து, புக்கில் படித்து ராபின் படம் என்ற ஆவலுடன் சென்றால் சிறிய ஏமாற்றமே மிஞ்சும் உங்களுக்கு.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 / 5