raod

சென்னையில் மீண்டும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே சாலையில் திடீரென  4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

பிராட்வே, சிவபிரகாசம் சாலையில் நடுவே ஏற்பட்ட இந்த திடீர் பள்ளத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஓரம் கழிவுநீர் கால்வாய் தோண்டப்படுவதால் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த பள்ளம் சீர் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக திடீரென சாலை நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.