ஸ்கூல் படிக்கும் பெண்ணின் கையில் இப்படி ஒரு மிரட்டும் ஆயுதமா.? சர்ச்சையை கிளப்பிய காடுவெட்டி ஆர்கே சுரேஷ்

RK Suresh : ஆர்கே சுரேஷ் பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளராக
செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்து வரும் நிலையில் இப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தினம் அவருடைய நடிப்பில் வெளியான படம் தான் காடுவெட்டி. சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு ரிலீசுக்கு முன்பே பல சிக்கல் ஏற்பட்டது. அதாவது பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.

இதனால் ஜாதி ரீதியான படமாக இருக்குமா என சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து பேசிய ஆர்கே சுரேஷ் இது ஜாதி ரீதியான படம் இல்லை என தெளிவு படுத்தினார். அதோடு இந்த படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

பள்ளி மாணவி கையில் அருவாள்

இந்நிலையில் காடுவெட்டி படத்தில் ஸ்கூல் படிக்கும் பெண்ணின் கையில் அருவாளை எடுக்கிறார். பள்ளிக்கு செல்லும் வழியில் தன்னிடம் தவறாக அணுகியவரின் கையை வெட்டுகிறார். அதுவும் இந்தப் பள்ளி மாணவி ஆரம்பத்தில் தனக்கு இது மாதிரி பிரச்சனை இருப்பதாக அவரது தந்தையான ஆர்கே சுரேஷ் மற்றும் தாயிடம் கூறுகிறார்.

அப்போது ஆர்கே சுரேஷ் தான் துணிச்சலாக இருக்க வேண்டும் என்ற அருவாளை கொடுத்து விடுகிறார். அதன் பின்பு தன்னை சீண்டிய வரை சரமாரியாக வெட்டுகிறார் மாணவி. பெண்களுக்கு கண்டிப்பாக துணிச்சல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தாலும், பள்ளி மாணவி கையில் அருவா எடுப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

இன்றைய தலைமுறையினரை சீரழிக்கும் விதமாக இந்த காட்சியை எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்த வருகிறார்கள். மேலும் இது போன்ற காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்