Connect with us

Cinemapettai

சிம்புவின் மாநாடு பட வில்லி யார் தெரியுமா? அடுத்த நீலாம்பரி டோய்ய்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் மாநாடு பட வில்லி யார் தெரியுமா? அடுத்த நீலாம்பரி டோய்ய்

மாநாடு படத்திற்கு..  இது வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் என டேக் லயன் வைத்தாலும் வைத்தார், மனிதர் பல பிரச்சனைகளை தகர்த்தெறிந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் படத்தை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாக உள்ளார்.

கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கொரானா முடிந்த பின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நெகட்டிவ் ஷேட் கலந்த பெண் அரசியல்வாதி ரோலில் அஞ்சனா கீர்த்தி நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Anjena Keerthi

அழகிய பாண்டியபுரம், அந்தாதி, ஜம்புலிங்கம் 3டி, அம்புலி, ஆஹா, படங்களில் நடித்தவர் அஞ்சனா கீர்த்தி. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் விஜய் வசந்தின் மனைவியாகவும், அதைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவான ஆர்.கே.நகர் படத்தில் காமாட்சி என்ற கேரக்டரிலும் நடித்தார்.

அஞ்சனா சென்னை மற்றும் துபாயில் வளர்ந்தவர். முன்னணி ஏரோபிளேன் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பார்த்த வேலையை விட்டுவிட்டு சினிமா பக்கம் வந்தவர். இப்படிப்பட்ட அஞ்சனாவுக்கு தான் 3வது வாய்ப்பு கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top