Connect with us

Cinemapettai

அறிவிக்கப்பட்டது ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் பயணம்…

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அறிவிக்கப்பட்டது ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் பயணம்…

ஆர்ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என சர்ச்சையை ஏற்படுத்திய சுவர் விளம்பரம் குறித்த ரகசியம் கடைசியாக வெளியாகி இருக்கிறது.

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாது, சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை என அனைத்திலும் முதல் ஆளாக தனது கருத்தை வெளியிடுவார். சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தினை ஆதரித்து ஐபிஎல்லில் தனது கமெண்டரி பணியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து, ஒரு சுவர் விளம்பரம் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவியது. அந்த விளம்பரத்தில், இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களை வரவேற்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ரஜினி, கமலை போல ஆர்.ஜே பாலாஜியும் அரசியலுக்கு வந்து விட்டதாக நெட்டிசன்கள் கிசுகிசுத்தனர்.

RJ-Balaji

அதே நேரத்தில், அந்த விளம்பரத்தில் இருந்த கொடியின் புகைப்படத்தினை தனது சமூக வலைத்தளத்தில் பாலாஜி வெளியிட்டு எரியும் தீயில் மேலும் எண்ணெயை ஊற்றினார். என்னப்பா இது உண்மையை சொல்லுங்கோ என கோலிவுட்டில் பேச்சுகள் தொடங்கியது. அட இதெல்லாம் அரசியல் அறிவிப்பு இல்லப்பா! கன்னடத்தில் வெளியான ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ் படத்தின் தமிழ் ரீமேக்கில் பாலாஜி நாயகனாக நடிக்க இருக்கிறார். அதன் அறிவிப்பு தான் இது என சிலர் அடித்துக் கூறினர். இதை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி ஒரு ட்வீட்டை பதிவிட்டார். “உங்கள் அனைவரது பேராதரவிற்கும், பேரன்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். மே 18ம் தேதி ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள் இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் எனது அடுத்தகட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள எனக் குறிப்பிட்டு இருந்தார். என்ன பாஸ் இவ்வளோ சஸ்பென்ஸா என எல்லாரும் குழப்பினர்.

இந்நிலையில், அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதை தனது டுவிட்டர் பதிவில் ஆர்,ஜே,பாலாஜி வெளியிட்டு இருக்கிறார். அப்பதிவியில், ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக. LKG எனத் தெரிவித்து இருக்கிறார். முதல்முறையாக ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் எல்.கே.ஜி படத்தை ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். பிரபு இயக்குகிறார்.

LKG

சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் செம வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top