Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி அவர்களின் அரசியல் கட்சியின் கொடி மற்றும் சின்னம் இது தானா. எகிறும் சஸ்பென்ஸ் !
ஆர்.ஜே. பாலாஜி
இவரின் இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ். தன் சொந்த உழைப்பு மற்றும் முயற்சியால் மிகவும் கஷ்டப்பட்டு முன்னறியவர் தான் பாலாஜி . ரேடியோ ஜாக்கி ஆக ஆரம்பித்த இவர் இன்று நடிகர் என்ற அந்தஸ்து வரை வந்துள்ளார். டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் வாயிலாக இளசுகள் மத்தியில் நல்ல ரீச் ஆனார்.ரேடியோ ஜாக்கியாக தன் பயணத்தை ஆரம்பித்த பாலாஜி இன்று நம் வீட்டில் ஒருவர் போலவே ஆகிவிட்டார்.
பிரதானாமாக இவர் ரேடியோவில் இருந்தாலும், மேடை நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, கல்லூரி விழாக்களில் பெர்பார்ம் செய்வது என்று பன்முகக் கலைஜனாகவே இருந்தவர்.பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக, சினிமாவில் காமெடி நடிகராக, ஸ்போர்ட்ஸ் வர்ணனனையாளராக என்று மிக பிஸியாகவே உள்ளவர். இவை அனைத்திற்கும் நடுவில் புயல் சமயத்தில் மக்களுக்கு உதவியது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது மாணவர்களுக்கு ஆதரவாக செய்யப்பட்டார். சமூக அக்கிரமங்களுக்கு குரல் கொடுப்பது என்று எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பவர்.
சமீபத்தில் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத அரசை எதிர்த்து சென்னையில் நடக்கும் ஐபில் போட்டிகளுக்கு வர்ணனனை செய்ய மாட்டேன் என்று சொன்னவர்.
சில தினங்களுக்கு முன் கூட ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வர இருப்பதாக திடீர் என சுவர் பெயின்டிங் ஒன்றின் போட்டோ ட்விட்டரில் பரவியது. திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம். “மே 18ல் இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜியை வருக வருக வரவேற்கிறோம்” என்ற சுவர் எழுத்துக்கள் தான் இணையத்தில் ஹாட் டாபிக்.
இந்நிலையில் பாலாஜி தனது த்விட்டேர் பக்கத்தின் டிஸ்பிலே போட்டோவை மாற்றியுள்ளார். சிகப்பு, வெள்ளை, பச்சை, கருப்பு நிறங்கள் கொண்ட கொடி போல உள்ளது. மேலும் நடுவில் மாடும் உள்ளது.

RJ B
வால் போஸ்டரில் இருக்கும் கொடியும், பாலாஜியின் டிஸ்பிலே போட்டோவும் இப்பொழுது ஒன்றாகவே உள்ளது. இதுவரை எந்த அதிகாரபொற்ற்வ அறிவிப்பையும் அவர் வெளியிட வில்லை. விரைவில் அதாவது மே 18 பாலாஜி இதுகுறித்து விளக்கம் அளிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
சினிமாபேட்டை கொசுறு நியூஸ்
கமலஹாசன் கூட அரசியல் என்ட்ரிக்கு முன் தன ட்விட்டர் கணக்கின் டிஸ்பிலே போட்டோவை பாரதி ஸ்டைலில் மாற்றியது நாம் அறிந்ததே. அதை ஸ்டைல் தானோ இதுவும் ?
