Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாகும் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார்.. பட தலைப்பு என்ன தெரியுமா ?
Published on
பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி – பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘LKG’. அரசியலை கேலியும் கிண்டலுமாக எடுத்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது பெற்றது. மேலும் அதே வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பாணரில் தான் பாலாஜியின் அடுத்த படமும் என்ற தகவல் முன்பே வெளியானது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் பாலாஜி கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்திற்கு மூக்குத்தி அம்மன் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் கதையை லேடி சூப்பர்ஸ்டாரிடம் சொல்ல, மிகவும் பிடித்துபோக நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.
ஹீரோயின் ரோல் கிடையாது என்கின்றனர் கோலிவுட் ஆசாமிகள். அப்போ அம்மன் வேடமாக தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
