Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர் ஜே பாலாஜியின் “எல்கேஜி’ , கன்னட படத்தின் ரீ- மேக்கா ?
ஆர் ஜே பாலாஜி
ஆர் . ஜேவாக பலராலும் அறியப்பட்டவர். கிராஸ் டாக் நிகழ்ச்சி கேட்டு வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக பிரச்சனைகளிலும் ஆர்வம் காட்டினார். புயல் , வெள்ளம் சமயத்தில் தன் நிகழ்ச்சி வாயிலாக மக்களுக்கு உதவி செய்தார். பின்னர் ஜல்லிக்கட்டு, காவேரி மேலாண்மை என தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.
அரசியில் என்ட்ரி

LKG
சில நாட்களாகவே இவரின் அரசியல் என்ட்ரி தான் ஹாட் டாபிக். முதல் சில இடங்களில் சுவர் பயிண்டிங், பின்னர் கட்சி கொடி என அதகளம் செய்தார். இவரின் புது படத்திற்கான மார்க்கெட்டிங் வேலை என பலரும் கூறினார்.
அதே போல் காமெடி நடிகர் என்பதில் இருந்து ஹீரோ அவதாரம் எடுக்கும் இவரின் படம் தான் “LKG “. இந்த போஸ்டர் வந்ததில் இருந்தே இது கன்னட படமான “ஹம்பில் பொலிடீஷின் நோகராஜ்” படத்தின் ரி- மேக் என்று கிசுகிசுத்தார்கள். இந்நிலையில் அந்த தகவல் பொய் என்பது உறுதியாக்கியுள்ளது.
டேனிஷ் சைட்

Danish Sait
இவர் தான் அப்படத்தின் ஹீரோ. இவர் ரேடியோ ஷோ மற்றும் யு ட்யூப் வீடியோ மூலமாக பிரபலமானவர் தான். இவருக்காகவே தான் அப்படத்தின் கதையை நன்கு நாட்களில் எழுதினாராம் இயக்குனர் சாத் கான்.
Hearing the talk that R J Balaji’s #LKG might be a remake of kannada hit film #HumblePoliticianNograj
Its not “TRUE”. Confirmed!!!#FunAwaited
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 18, 2018
இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில், ஆம் பலர் என்னை டாக் செய்கிறார்கள். என படத்தின் ரி- மேக் கிடையாது. அது ஆர் ஜே சூப்பர்ஸ்டார். அது அவர் உருவாக்கும் படம். ஆல் தி பெஸ்ட் படக்குழுவுக்கு என்றும் கருத்து பதிவிட்டார்.

இதற்கு பாலாஜி பதிலும் அளித்தார். “டேனிஷ் நீ மற்றும் உன்னுடைய படம் தான் எனக்கு கதை எழுதுவதற்கான தயிரியத்தை கொடுத்தது. முன்பு சத்தியம் செய்தது மாதிரியே தமிழில் நடிக்க தயாராக இரு.” என்று கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
