சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

Rj பாலாஜி படத்த பாத்துட்டு, கைதி 2வை மாத்தணும்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்! இது கார்த்திக்கு தெரியுமா?

ஆர்.ஜே. பாலாஜியின் படத்தைப் பார்த்துவிட்டு கைதி 2 படத்தை மாத்தணும் என லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்பு எழுந்துள்ள நிலையில் அடுத்தாண்டு இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்தை இயக்குவார் என தெரிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளியான கைது படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 2 வது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கூலி படத்துக்குப் பின் கைதி 2 படத்தை லோகேஷ் எடுப்பார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜியின் படத்தைப் பார்த்து பாராட்டிய லோகேஷ்

இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்க வாசல் படத்தின் டிரெயிலர் விழாவில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் என் நண்பர்கள். படக்குழுவினர்க்கு எனது வாத்துகள். டிரெயிலர் நன்றாக இருந்தது. இப்படத்தின் காட்சிகளை 6 மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.

அப்போது ஆர்.ஜே.பாலாஜி உருவாகிவிட்டார் என்றேன். கைது 2 படத்திலும் ஜெயில் காட்சிகள் உள்ளன. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் படம் பார்த்தபின் அதற்கு ஏற்ற மாதிரி கைதி2 வை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் மேடையில் நகைச்சுவையுடன் இதைக் குறிப்பிட்டிருந்தாலும், அவர் கைதி படத்தை எப்படி தரமாக எடுத்து ரசிகர்களி சீட்டில் நுனியில் அமர வைத்தாரோ, அதேபோல், கைதி 2 படம் மாஸாக இருக்க அவர் சிறிது டைம் எடுத்தாலும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு காட்சியும் வைப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், கார்த்தி தான் கைதி 2 படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில், இதுகுறித்து லோகேஷ், கார்த்தியுடன் ஆலோசனை மேற்கொள்வாரா? என கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

Trending News