காமெடியை தாண்டி RJ பாலாஜியை தூக்கிவிட்ட 5 படங்கள்.. ஆஹா, இதுல ரெண்டு மூவி இவரே இயக்கியாத

வானொலி தொகுப்பாளராக இருந்த RJ பாலாஜி, டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். மேலும் தன்னுடைய நகைச்சுவை கலந்த வித்தியாசமான கிரிக்கெட் வர்ணனையினால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர், 2013 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சியின் மூலமாக சினிமா துறைக்கு வந்தார். காமெடியனாகவே செட்டில் ஆகி விடாமல், சினிமாவில் இயக்குனராக, ஹீரோவாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார். காமெடியை தாண்டி RJ பாலாஜி பெயர் வாங்கிய 5 படங்கள்,

எல் கே ஜி: 2019 ஆம் ஆண்டு இயக்குனர் லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் RJ பாலாஜி முதன் முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் எல் கே ஜி. இன்றைய நவீன அரசியலை காமெடியுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வந்த படம் இது. இந்த படத்திலேயே பாலாஜி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read: இயக்குனர் ராமின் அடுத்த பட ஹீரோ இவரா? செட் ஆகுமா என ஆச்சர்யத்தில் கோலிவுட்

மூக்குத்தி அம்மன்: 2020 ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை என். ஜே. சரவணனுடன் இணைந்து RJ பாலாஜி இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு திரைக்கதையும் இவரே எழுதியிருந்தார். ஒரு பக்தி படத்தை சமகால பிரச்சனைகளோடு கலந்து கொடுத்திருந்தார்.

தானா சேர்ந்த கூட்டம்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தி திரைப்படமான ஸ்பெசல் 26 ன் ரீமேக் தான் இந்த திரைப்படம். RJ பாலாஜி இந்த படத்தில் ‘பல்லாவரம்’ பரஞ்சோதி பாண்டியன் என்னும் கேரக்டரில் நடித்து இருந்தார்.

Also Read: நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை காலி செய்த விக்னேஷ் சிவன்.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

நானும் ரவுடி தான்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. டார்க் காமெடி கதைக்களத்தில் உருவான திரைப்படம் இது. படம் முழுக்க வரும் பாலாஜியின் காமெடிக் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன.

வீட்ல விசேஷங்க: பதாய் ஹோ என்னும் இந்தி திரைப்படத்தின் ரீமேக் தான் வீட்ல விசேஷங்க. நக்கலான நடிப்புக்கு பேர் போன நடிகர் சத்யராஜுடன் இணைந்து RJ பாலாஜி கலக்கியிருந்தார். 2022 ஆம் ஆண்டு ரிலீசான இந்த படம் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

Also Read: சத்யராஜ் கௌரவ வேடத்தில் அசத்திய 5 படங்கள்.. இந்த கேரக்டர்களில் வேற யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்