ரேடியோ ஜாக்கியாக தன் பயணத்தை ஆரம்பித்த பாலாஜி இன்று நம் வீட்டில் ஒருவர் போலவே ஆகிவிட்டார். டேக் இட் ஈஸி, கிராஸ் டாக், 120 ரூபாயும் rjபாலாஜியும் போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். பிரதானாமாக இவர் ரேடியோவில் இருந்தாலும், மேடை நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, கல்லூரி விழாக்களில் பெர்பார்ம் செய்வது என்று பன்முகக் கலைஜனாகவே இருந்தவர்.பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக, சினிமாவில் காமெடி நடிகராக, ஸ்போர்ட்ஸ் வர்ணனனையாளராக என்று மிக பிஸியாகவே உள்ளவர். இவை அனைத்திற்கும் நடுவில் புயல் சமயத்தில் மக்களுக்கு உதவியது,  ஜல்லிக்கட்டு போராட்டம், சமூக அக்கிரமங்களுக்கு குரல் கொடுப்பது என்று எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்பட்டவர்.

அமெரிக்காவில் வரும் ஜனவரி மாதம்  நிகழ்ச்சி நடத்தப்போகிறார் பாலாஜி, அதன் முதல் லுக் போஸ்டரை அவருடைய நண்பர்கள் நடிகர் ஜீவா, ஆர்யா, சிவா கார்த்திகேயன், கவுதம் கார்த்திக், கார்த்தி ஆகியோர், தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.இதனால் இவர் திடீரென்று ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனார்.

“Ice House To White House”, “RJ Balaji Live In Usa” என்று ஹாஷ்டாக் இட்டு பலமுறை ரீ ட்வீட் ஆனது இந்த போஸ்டர்.

எத்தனை நாட்கள் இந்த பயணம். அவர் எங்கெங்கு செல்லப்போகிறார் போன்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. ஆர்.ஜே.பாலாஜியும் தன் பங்கிற்கு “மிஸ்டர், டிரம்ப், தயாராகுங்கள் ஜனவரி 2018  அமெரிக்கா வருகிரேன்” என்று டீவீடியுள்ளார்.

விஜய் டிவியின் தொகுப்பாளினியான டிடி தன் பங்கிற்கு “யூஸ் விசா கிடைத்ததும், என் போன் அட்டென்ட் பண்ணமாட்டேங்கிற, மன்னிச்சுட்டேன். என்கிட்டயும் விசா இருக்கு, எனக்கும் சேர்த்து டிக்கெட் போடு” என்று இவரை கலாய்த்தார்.

அதற்கு தன் பாணியில் பாலாஜி பதிலும் தந்தார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ் :’ஆளப்போறான் தமிழன்’ மெர்சல் விஜய்க்கு மட்டுமில்ல நம்ம ஆர்.ஜே.பாலஜிக்கும் பொருந்தும்.