ஜல்லிக்கட்டு ஆதரவாக மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில், நேற்று இரவு அவர்களை சந்தித்த RJ பாலாஜி தன்னுடைய கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைக்கல, யாரும் குடிச்சிட்டு கலாட்டா செய்யல, இங்கு இருக்கிற எல்லாரும் தெளிவா இருக்காங்க.

இந்த ஒற்றுமை போராட்டம் ஜல்லிக்கட்டுடன் நின்றுவிடக்கூடாது, நாளை விவாசாய மக்களுக்காகவும், காலேஜ் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் இந்த மாதிரியான போராட்டங்கள் நடக்கும். இனிமேல் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துள்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.