இந்நிலையில் இதுகுறித்த கருத்துக்கு ஆர்.ஜே பாலாஜி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் ; “நான் ஸ்கூல் படிக்கும்போது தமிழ்நாடு பாலிட்டிக்ஸ் ரொம்ப பீக்ல இருந்துச்சு. எங்க தாத்தா எது பேசினாலும் அவர் பேச்சை கேட்கிற ஒரே ஆளு நான் மட்டும்தான். அப்ப ‘முத்து’ படம் ரிலீஸாகி இருந்தது. ‘இந்தப் படத்துல ரஜினி, மீனாகிட்ட பேசுற வசனம் எல்லாம் ஜெயலலிதாவுக்குச் சொல்ற பதில்தான்’னு என்கிட்ட தாத்தா சொன்னார். ‘ஏம்மா… நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துட்டுதான இருக்கேன்’னு ரஜினி சொல்ற வசனத்தைக் கேட்டு, ஆறாவது படிக்கிற எனக்கே `இது அரசியல்’னு தெரிஞ்சது.

 

அப்புறம் நான் 11-வது படிக்கும்போது `பாபா’ வெளிவந்தது. அதுல வர்ற ஒரு பாட்டுலயும் ‘பாபா… கிச்சுக் கிச்சு தா’னு வரும். அதுக்கு இவர் தர மாட்டேன்னுதானே சொல்லணும். ஆனா, தலையை ஆட்டி ‘தமிழ்நாடு… தமிழ்நாடு என் உயிர் நாடு…’னு அங்கேயும் அரசியல் பேசுவார். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் பேசிட்டிருக்கிறார். அரசியலுக்கு வருவது காலத்தின் கையில்னு 25 வருஷமா கேட்டாச்சு. நான் தீவிரமான சூப்பர் ஸ்டார் ரசிகன் என்ற முறையில் சொல்றேன். அவர் இப்ப அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அது போயிடுச்சு.”

“யாராவது புது ஹீரோ இப்படிப் பண்ணினால் `ஸ்டன்ட்’னு சொல்லலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆச்சுன்னா, இந்தியா முழுவதும் உள்ள நியூஸ் சேனலில் ‘why he is super star?’னு விவாதமே நடத்துறாங்க. `ஷாரூக் கான்கிட்ட இல்லாதது, அமீர் கான்கிட்ட இல்லாதது, சூப்பர் ஸ்டார்கிட்ட என்ன இருக்கு?’னு விவாதிக்கிறாங்க. அதனால, படம் ஓடவைக்கணும்னு ஸ்டன்ட் மாதிரி எனக்குத் தெரியலை. ஆனா, 99.99 சதவிகிதம் ரஜினி, அரசியலுக்கு வர மாட்டார். இப்ப என் பையனுக்கு நான் ‘முத்து’ படம் பார்த்த வயசாகுதுங்க.”என கூறியுள்ளார்.