Connect with us
Cinemapettai

Cinemapettai

CSK

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காவேரி மேலாண்மை வாரியம் வேண்டும்.! ஐ.பி.எல் கமெண்டரியை செய்யபோவதில்லை ஆர்.ஜே.பாலாஜி அதிரடி.! வீடியோ இணைப்பு

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ளது, ஆனால் பல போராட்டகாரர்கள் போட்டி நடத்தகூடாது என பலர் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

இப்படி இருக்க ஆர்.ஜே பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், அதில் அவர் கூறியதாவது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைவரும் போராடுகிறார்கள் ஒரு தமிழனாய் நானும் என்னுடைய பங்களிப்பாக சென்னையில் நடக்கும் சிஎஸ்கே போட்டியில் எனது கமெண்ட்ரி பணியை நான் பன்னபோவதில்லை என கூறியுள்ளார்.

மேலும் இதை பற்றி சம்ந்த பட்ட சேனலிடம் கூறும் பொது அவர்கள் எனகளது உணர்வை மதித்து ஏற்று கொண்டதற்கு நன்றி மொத்த நாட்டின் கவனத்தை பெற இப்படி போராடுவதாக கூறுகிறார்கள்.

சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார் ஆம் நம் ஓட்டு போட்ட 234 எம்.எல்.ஏ க்களும் 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்தால் நாட்டின் மொத்த கவனத்தையும் பெறலாம் ஒரு மாநிலத்தில் எந்த நிவாகமும் இல்லையென்றால் உலகமே திரும்பி பார்க்கும் என கூறினார் பாலாஜி.
தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top