செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட RJ பாலாஜி.. என்ன காரணம் தெரியுமா?

Sivakarthikeyan: மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் மன்னிக்க தெரிஞ்ச பெரிய மனுஷன் அப்படின்னு ஒரு வசனத்தை கமல் பேசியிருப்பார். அப்படி ஒரு நிகழ்வு தான் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர் ஜே பாலாஜி இருவருக்கும் இடையே நடந்திருக்கிறது.

இரண்டு பேரும் எந்த படத்திலும் சேர்ந்து கூட நடிக்கலையே இவங்களுக்குள்ள என்ன பஞ்சாயத்து இருக்கும் என எல்லோருக்கும் தோணும். சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதன் கிளிப்புகள் பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கின்றன.

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட RJ பாலாஜி

தன்னுடைய சினிமா அனுபவத்தை ரொம்பவும் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். நானும் ரௌடி தான் பட சமயத்தில் தனக்கு கார் ஓட்ட தெரியாது எனவும் அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் சந்தித்த அவமானம் பற்றியும் பேசி இருந்தார்.

அதேபோன்று நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கைவிட்டு போனது பற்றி பகிர்ந்திருந்தார். இந்தியன் 2 படத்தின் வாய்ப்பை சொர்க்கவாசல் படத்தில் நடிப்பதற்காக வேண்டாம் என்று சொன்னதாகவும் சொல்லியிருந்தார்.

இந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது பற்றியும் பேசி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ஒரு தனியார் சேனலில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது சில மேடைகளில் சிவகார்த்திகேயன் அழுவதை கிண்டல் செய்து இருக்கிறேன். ஆனால் அதன் பிறகு தான் அப்படி செய்தது தவறு என எனக்கு தோன்றியது. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

Trending News