செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. தனுஷ்-நயன் பிரச்சனையில் RJ பாலாஜியின் நச் பதில்

Nayanthara: எட்டு வருஷத்துக்கு முன்னாடி ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் கொடுத்த ஒரு படத்தோட பஞ்சாயத்து இப்போ கிளம்பும் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நானும் ரவுடிதான் படம்தான் அது.

இத்தனை காலகட்டங்களாக இந்த படத்தின் காட்சிகளையும் பாடல்களையும் பார்க்கும் பொழுது மனதில் என்னென்னவோ ஞாபகம் வரும். இனி காலம் முழுக்க இந்த படத்தை பார்க்கும் பொழுது தனுஷ் மற்றும் நயன்தாரா பஞ்சாயத்து தான் நம் நினைவிற்கு வந்து போகும்.

RJ பாலாஜியின் நச் பதில்

நேற்றிலிருந்து இந்த பஞ்சாயத்து தீப்பிடித்து கொண்டிருக்கும்போது இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களை விட்டு வைத்து விடுவார்களா. யாரெல்லாம் சிக்கிறாங்களோ அவங்க கிட்ட எல்லாம் இந்த பிரச்சனையை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு மைக்கை நீட்டி தான் ஆக வேண்டும்.

அதில் தற்போது முதலில் சிக்கி இருப்பது நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி என் நண்பனாக நடித்த ஆர் ஜே பாலாஜி தான். அது மட்டும் இல்ல இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற பிளாக் பாஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இந்த பிரச்சினைக்கு அசால்ட் ஆக ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் பாலாஜி. இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கிடையே சண்டை, மூன்று வினாடிக்கு 10 கோடி அபராதம் என்று சமூக வலைத்தளத்தில் பார்க்கும் பொழுது இதை எப்படி ரிசீவ் பண்றது என எனக்கு தெரியல.

பேய்க்கும் பேய்க்கும் சண்டை, கூத்தாடி இரண்டு பட்டா ஊருக்கு கொண்டாட்டம் என்பது போல் தான் இருக்கிறது. தனுஷே இதுக்கு பதில் சொல்லல, நம்ம எதுக்கு பதில் சொல்லிக்கிட்டு, அவங்க பிரச்சனையை அவங்களே பேசி தீர்த்துப்பாங்க, நடுவுல நம்ம ஏன் நம்மளோட கருத்தை சொல்லிக்கிட்டு இருக்கணும் என்று பதில் சொல்லி இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

- Advertisement -

Trending News