Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர்.ஜே. பாலாஜி அடுத்த படம் யாருடன்.. மேடையிலேயே அறிவித்தார்
ரேடியோவில் தொடங்கிய பாலாஜி வாழ்க்கை பின்பு ஆர்.ஜே. பாலாஜி ஆக மாறினார். வேகமாக பேசும் ஆர்.ஜே. பாலாஜி காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆர்.ஜே. பாலாஜி அடுத்த படம் யாருடன்
ரேடியோவில் தொடங்கிய பாலாஜி வாழ்க்கை பின்பு ஆர்.ஜே. பாலாஜி ஆக மாறினார். வேகமாக பேசும் ஆர்.ஜே. பாலாஜி காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ரேடியோவை விட்டு சினிமாவில் ஏற்றுக் கொள்வார்களா என்று பார்த்தால் கண்டிப்பாக திறமை இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்று நிரூபித்து விட்டார்.
எல்லாம் விஜய் டிவி, சன் டிவி என தொலைக்காட்சிகளில் புகழ்பெற்று பின்பு நடிகராக மாறினார்கள். ஆனால் ஆர்.ஜே. பாலாஜி ரேடியோவில் புகழ்பெற்று இப்ப்ழுது சினிமாவில் கல்லா கட்டி. இன்னும் இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார் சிவகார்த்திகேயன் இடத்திற்கும் போகலாம்.
எல்கேஜி படத்தின் ட்ரைலர் வெளிவந்த பின் அவருக்கு நான்கைந்து பட தயாரிப்பாளர்கள் அழைத்து பேசியுள்ளார்கள். ஆனால் அவர் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் படம் வெளிவரட்டும் என பொறுமையாக இருந்தார். இப்பொழுது படம் வெளிவந்த பின் படம் வெற்றி பெற்றது.
எல்கேஜி படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி “என்னுடைய அடுத்த படம் கண்டிப்பாக ஐசரி கணேஷ் ஒத்துக்கொண்டால் அவருடன் மட்டும்தான் பண்ணுவேன். இனிவரும் படங்களையும் அவருடன் விவாதித்து பின்புதான் நான் முடிவெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.
ஆமாம் ரேடியோவில் இருந்தது, சினிமாவில் காமெடியாக சுற்றி வந்த ஆர்.ஜே. பாலாஜியை ஒரு கதாநாயகனாக மாற்றியவர் ஐசரி கணேஷ். இவர் வேல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆவார்.
