வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஜோதிகாவுக்கு RJ பாலாஜியின் பதிலடி.. அவருக்கு புரிஞ்சது கூட உங்களுக்கு புரிலயே கங்கா!

RJ Balaji: 20 வருஷத்துக்கு முன்னாடி சினிமாவுக்கு வந்த ஜோதிகாவுக்கு இப்போ வந்த RJ பாலாஜி அறிவுரை சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து இந்த படத்தில் பட விழாவில் பாலாஜி ஒரு சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் முக்கியமான ஒன்றுதான், படத்தின் விமர்சனங்களை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது. ஒரு பிஸ்கட்டை கடையில் விற்க கொடுத்துட்டா, அதை வாங்கிட்டு போனவங்க நல்லா இருக்கு நல்லா இல்லன்னு சொல்ல தான் செய்வாங்க.

RJ பாலாஜியின் பதிலடி

ஏன்னா அந்தப் பொருள் வெளியே போயிடுச்சு. அப்படித்தான் சினிமாவும். படத்த நம்ம ரிலீஸ் பண்ணிட்டோம்னா அதை பாக்குறவங்க நல்லா இருக்கு நல்லா இல்லைன்னு சொல்ல தான் செய்வாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. ஒரு படம் ரிலீஸ் ஆயிடுச்சின்னா அந்த படத்தை யார் வேணா விமர்சனம் பண்ணலாம்.

கண்டன்டு நல்லா இருந்தா கண்டிப்பாக அந்த படம் மக்களிடம் போய் சேரும், அதை யாராலும் தடுக்க முடியாதுன்னு சொல்லி இருக்கார். பாலாஜி பொதுவாக இப்படி பேசி இருந்தாலும் இது சமீபத்தில் கங்குவா படத்திற்கு அறிக்கை வைக்க ஜோதிகாவிற்கு மறைமுகமாக புத்திமதி சொல்வது போல் தான் தெரிகிறது.

- Advertisement -

Trending News