Connect with us

Cinemapettai

தோழர் ஆர்.ஜே.பாலாஜி செய்த உதவியால், மனம் நெகிழ்ந்த பிரபல இயக்குனர் !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தோழர் ஆர்.ஜே.பாலாஜி செய்த உதவியால், மனம் நெகிழ்ந்த பிரபல இயக்குனர் !

ஆர்.ஜே.பாலாஜி தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு செயற்கை கை பொருத்துவதற்கு உதவி செய்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி

தன் சொந்த உழைப்பு மற்றும் முயற்சியால் மிகவும் கஷ்டப்பட்டு முன்னறியவர் தான் நம் பாலாஜி . ரேடியோ  ஜாக்கி ஆக ஆரம்பித்த இவர் இன்று நடிகர் என்ற அந்தஸ்து வரை  வந்துள்ளார்.   இவரின் இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ். டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் வாயிலாக இளசுகள் மத்தியில் நல்ல ரீச் ஆனார்.

சென்னை வெள்ளம் வந்து அவதிப்பட்ட பொழுது, தன் நிகழ்ச்சி வாயிலாக பல உதவிகளை செய்தார். பின்னர் ஜல்லிக்கட்டு சமயத்திலும் யாருக்கும் அஞ்சாமல் மாணவர்களுக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தினார். விவசாயி களின் அவலம், ஊழல், சமூக நலன் என்று அவ்வப்பொழுது தன் கருத்தை பதிவு செய்வார்.

ராஜு முருகன்

எழுத்தாளராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர்  ராஜு முருகன். சினிமாவில் ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதனையடுத்து குரு சோமசுந்தரத்தின் ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். ‘ஜோக்கர்’ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றார். பாலாஜி செய்துள்ள உதவி பற்றிய தகவலை   இயக்குநர் ராஜு முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு பின் வருமாறு …

தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பூஜா என்ற பெண்ணின் தம்பிக்கு சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் ஒரு கை போய்விட்டது. ‘உடனடியாக செயற்கை கை பொருத்த வேண்டும்… அதற்கு 2 லட்சத்துக்கு மேல் செலவாகும்’ என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். எளிய குடும்பமான அவர்களுக்கு இது இயலாத தொகை. ‘ஜோக்கர்’ நேரத்தில் அறிமுகமாகியிருந்த பூஜா எனக்கு தொலைபேசியில் இதை தெரிவித்தார்.

நான் இதை ஒரு தகவலாக ஆர்.ஜே. பாலாஜியிடம் சொன்னேன். உடனடியாக அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து செயற்கை கை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர். ‘நல்லபடியா கை வெச்சுட்டாங்க சார்… இப்போ தம்பி ஸ்கூட்டில்லாம் ஓட்றான்…’ என பூஜா நேற்று பேசினார். நன்றி ஆர்.ஜே. பாலாஜி தோழர்! தொடர்ந்து இம்மாதிரியான நற்செயல்களை முன்னெடுத்து கொண்டிருக்கிற அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் ‘வி ட்ரஸ்ட்’ ‘சென்னை மைக்ரோ’ அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள்!” என்றார்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

பப்பிளிசிட்டி மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக சினிமா துறையில் பலரும் அலைந்துகொண்டு இருக்கும் இந்நேரத்தில் தன்னால் இயன்ற உதவியை செய்து விட்டு அமைதியாக தன் வேலையில் கவனம் செலுத்தும் இந்த குணத்திற்க்காகவே இவரை பாராட்ட வேண்டும். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் அன்பரே !!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top