fbpx
Connect with us

Cinemapettai

அரசியலுக்கு வரும் ஆர்.ஜே.பாலாஜி; அதிர்ச்சியில் திரையுலகம்

News | செய்திகள்

அரசியலுக்கு வரும் ஆர்.ஜே.பாலாஜி; அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல ஆர்ஜேவாகவும், காமெடியனாகவும் கலக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வர இருப்பதாக திடீர் போஸ்டர்களால் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி பிரபல வானொலியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக பேச்சால் பல ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது கோலிவுட்டின் பிரபல காமெடியனாக இருந்து வருகிறார். நானும் ரவுடி தான், தேவி உள்ளிட்ட வெற்றி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு பக்கம் திரை வாழ்வு என்றாலும் சமூக பிரச்சனைகளிலும் முதல் ஆளாக இருந்து வருபவர்.

சென்னை வெள்ளத்தின் போது ஊரே தண்ணி காடாக இருந்த போது முதல் ஆளாக களத்தில் இறங்கியவர். மக்களுக்கு உணவுகளை வழங்குவதில் இருந்து வெள்ள தண்ணீரை வெளியேற்றுவது வரை பல முயற்சிகளை கையில் எடுத்தார். தொடர்ந்து, வெள்ள நிவாரண நிதிக்காக முதலமைச்சரிடம் ரூபாய் ஒரு கோடியை கொடுத்தார்.

தொடர்ந்து, ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா போராடியது. அதற்கு இளைஞர்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தினர். லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடியது உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதில், சில பிரபலங்களும் தங்கள் ஆதரவை தந்தனர். அதில், முதல் ஆளாக நின்றவர் ஆர்.ஜே.பாலாஜி தான். இதை போல, விவசாயிகளுக்காவும் குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என போராட்டங்கள் நடத்தினர். இதற்கு ஆதரவாக சென்னை போட்டிகளை தொகுத்து வழங்கும் பணியில் இருந்து விலகியதாக அறிவித்தார். ஒரு பக்கம் நடிப்பு, ஒரு பக்கம் சமூக பணி என பிஸியாக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி குறித்த ஒரு ஷாக் தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

மே 18ல் இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜியை வருக வருக வரவேற்கிறோம் என்ற சுவர் எழுத்துக்கள் தான் இன்றைய இணையத்தின் ஹாட் டாக். ஆனால், இது எந்த இடத்தில் வரையப்பட்டு இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில், பாலாஜி இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top