புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஆர்ஜே பாலாஜி பிடியில் சூர்யா.. கங்குவா தலை தப்புமா.?

RJ Balaji : சூர்யாவுக்கு இந்த வருடம் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சிறுத்தை சிவாவின் கங்குவா படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் சில காரணங்களினால் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

இதற்கு அடுத்தபடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 வது படம் உருவாக இருக்கிறது. மேலும் வெகு மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கும் படம் தான் சூர்யாவின் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இப்போது ஆர் ஜே பாலாஜியின் பிடியில் சிக்கி உள்ளார் சூர்யா. அதாவது பன்முகத்தன்மை கொண்ட ஆர் ஜே பாலாஜி இயக்குனராகவும் பல படங்களை இயக்கியிருக்கிறார். அதுவும் அவரது இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

சூர்யாவை வைத்து இயக்கும் ஆர்ஜே பாலாஜி

இந்த சூழலில் முதல் முறையாக சூர்யாவின் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்க உள்ளார். வித்யாசமான இந்த காம்போ இணைந்துள்ளதால் படம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஆர்.ஜே பாலாஜி மிகவும் கலகலப்பான படங்களை எடுக்க கூடியவர்.

சில படங்கள் இதில் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனாலும் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவி இருக்கிறது. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான வீட்ல விசேஷம் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் தன்னிடம் நல்ல கதை இருப்பதாகவும் விஜய் போன்ற பெரிய நடிகர்களிடம் கதை குறித்து பேசியதாக ஆர் ஜே பாலாஜி கூறியிருந்தார்.

இப்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதில் கடவுளிடம் இருக்கும் அருவாள், வேலு என பல ஆயுதங்கள் வைத்து இந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை ஆர் ஜே பாலாஜியின் கதை சூர்யாவுக்கு வொர்க் அவுட் ஆனால் வெற்றி தான். ஆர்ஜே பாலாஜி கங்குவாவின் தலையை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News