ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக ஆண்களுக்கு ஆர்ஜே பாலாஜி ஓர் அறிவுரை சொல்வதுபோல ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் பரவியது

07-1467871264-rj-balaji345

அதில், ஸ்வாதி போன்ற பெண்கள் ஆணின் காதலை நிராகரிக்கும்போது, வாழ்க்கையில் முன்னேறிக் காட்ட வேண்டும். அப்போது அந்தப் பெண்ணே வந்து உங்களிடம் பேசுவாள். பதிலுக்கு அவளிடம்அ வளிடம் மலைடா, அண்ணாமலைடா என்று கூறி ஃபேஸ்புக்கிலிருந்து பிளாக் செய்யுங்கள் என ஆர்ஜே பாலாஜி அறிவுரை கூறுவதுபோல ஆங்கிலத்தில் போடப்பட்டிருந்தது அந்த மீம். அதில் அண்ணாமலை ரஜினி படமும் இடம்பெற்றிருந்தது.

இதற்கு ஆர்ஜே பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இதை நான் சொல்லவில்லை. ஒரு பெண் உங்களை நிராகரித்தால் அவள் முடிவை மதியுங்கள். அவளை விட்டு விலகிவிடுங்கள். அவளுக்கு எதையும் நிரூபிக்கத் தேவையில்லை,” என்று கூறியுள்ளார்.