செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. குறுக்க நான் போய் ஏன் தலையை கொடுக்கணும்.. RJ பாலாஜி clear cut பதில்

நயன்தாரா தனுஷ் பிரச்சனையை பற்றி இன்னும் யாரும் பேசி முடித்தபாடில்லை. அடுத்த பஞ்சாயத்து ஏதாவது பெருசா வந்தால் தான் இந்த ஊர் வாய் மூடும் போல. நயன்தாரா வெளியிட்ட அறிக்கைகள் பெரிய அளவில் விவாதப்பொருளாகி உள்ளன. இந்த விவகாரம் தற்போது தனுஷ் – நயன்தாரா ரசிகர்களுக்கு இடையிலான மோதலாக மாறி உள்ளது. அருவெறுக்கத்தக்கும் வகையில் இரண்டு பேரின் ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது என்றே சொல்லலாம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். டாப் நடிகையான இவர், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நியாயமாக எந்த ஒரு ப்ரொட்யூசருக்கு, படத்தை எடுத்து முடிக்காமல், ரெண்டு பேரும் ஊர் சுற்றினால் கோவம் வர தான் செய்யும். அதே தான் தனுஷுக்கும். 6 கோடியில் படத்தை முடிக்கச்சொன்னால், இவர்கள் காதலுக்காக தனுஷ் எக்ஸ்ட்ரா 10 கோடி மொய் வைக்கும் அளவிற்கு செலவை இழுத்துவிட்டார்கள்.

தெளிவாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி

இப்போ இழந்த 10 கோடியை தனுஷ் கேட்டபோது, அய்யோ அம்மா என்று கதறுகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில், ஆர்.ஜே. பாலாஜி இந்த விவாகரத்துக்கு நச் என்று ஒரு பதிலை கொடுத்துள்ளார். இவரும் தானே நானும் ரவுடி தான் படத்தில் நடித்தார். அதனால் இவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி முன்வைக்க பட்டபோது, clear cut-ஆக ஒரு பதிலை சொல்லிவிட்டார்.

அதில், “பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. குறுக்க நம்ம எதுக்கு போயி கமெண்ட் பண்ணிட்டு.. ரெண்டு பேரும் பெரிய ஆளுங்க.. இன்னிக்கு அடிச்சுப்பாங்க. நாளைக்கு சேருவாங்க. நம்ம இதுல கமெண்ட் பண்ண ஒண்ணுமே இல்ல. அதுமட்டும் இல்லாம நான் அடுத்த படம் எடுக்கற வேலைல பிசியா இருக்கேன்.. இப்போ எனக்கு எதுக்கு இந்த வம்பு” என்று தெளிவாக பேசிவிட்டார்.

- Advertisement -

Trending News