அசத்திய R.J.பாலாஜி.. 2019ல் நிகழ்கால அரசியலை தரமாக வைத்து செய்த எல்.கே.ஜி

பிரபு இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த அரசியல் காமெடி திரைப்படமான எல்கேஜி, இந்த ஆண்டின் சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று.

தமிழ் சினிமாவில் பொதுவாகவே அரசியல் திரைப்படங்கள் வெற்றி பெறுவது இப்போதைய காலக்கட்டத்தில் கடினமாக உள்ளது. ஆனால் நிகழ்கால அரசியலை தைரியமாக நையாண்டி செய்து எல்கேஜி படத்தை உருவாக்கி இருப்பார்கள் பிரவும் ஆர்ஜே பாலாஜியும்.

அதில் பழம்பெரும் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பந்த் ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக, தோற்றுப்போன அரசியல்வாதியாக நடித்து அசத்தி இருப்பார். அதேபோல் ஜேகே ரித்தீஷ் நல்ல அரசியல்வாதியாக நடித்திருப்பார்.

பிரசாத் கிஷோர் போன்ற அரசியல் சாணக்கியர் வேடத்தில் பிரியா ஆனந்த் நடித்திருப்பார்.அவரவர் அவரவர் வேடங்களை சிறப்பாக ஏற்று நடித்திந்தார்கள். வசூலில் நல்ல சாதனை படைத்தது. உண்மையில் அருமையான வெற்றிபடம் எல்கேஜி. நிகழ்கால அரசியலை தரமாக வைத்து செய்திருப்பார் ஆர்ஜே பாலாஜி. அதற்காகவே ஒரு சபாஷ் போடலாம்.

Leave a Comment