Connect with us
Cinemapettai

Cinemapettai

riyo-angry

TV | தொலைக்காட்சி

டிவி நிகழ்ச்சி நடுவே பெரும் சண்டை போட்ட ரியோ வீடியோ.. இதுக்குதான் சம்பளம் கொடுகறீங்களா என கூச்சல்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ. ரியோ விற்கு சின்னத்திரை ரசிகர்கள் தற்போது ஏராளமாக உள்ளனர். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது அதனை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினர். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடியுள்ளனர்.

ரியோ விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியான ரெடி ஸ்டெடி கோ எனும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் இரண்டு குழுவாகவும் விளையாடுவார்கள். இரண்டு குழுவிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

அப்போது டாஸ்க் எனும் பெயரில் விளையாட்டு நடைபெற்றது. ஒரு தரப்பினர் என்னால் முடியாது என கூற மற்றொரு தரப்பினர் பெண் நாம் விளையாடுவதற்காக வந்துள்ளோம். அதனால் விளையாடிதான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் என்னால் முடியாது எனக் கூற பின்பு வாக்குவாதம் பெரிதாக ஏற்பட்டது.

இடையில் நுழைந்த ரியோ யாருடா இங்க கோ எடிட்டர் எனக் கேட்டுவிட்டு. பின்னர் இவரிடம் திட்டு வாங்குவதற்கான தான் நான் சம்பளம் வாங்குகிறேனா என கேட்டுள்ளார். அதனை அந்த தொலைக்காட்சி தன் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது உண்மையான கோபமா இல்ல டிஆர்பி காக செய்யப்பட்ட சூழ்ச்சியால என தெரியவில்லை. ஆனால் ரியோ ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top