ritika-snighசமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இதில் நாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

இவர் அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைவது குறித்து பேசிய அவர், ” விஜய்சேதுபதி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை சந்திக்கும் முன்பு அவர் நடித்த எல்லா படங்களையும் பார்க்க விரும்புகிறேன்”