ritika-singh-irudhi-suttru-hotஇறுதிச்சுற்று படத்தில் மாதவனுக்கு ஈடுகொடுத்து நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அறிமுக நடிகை ரித்திகா சிங். இவரது அடுத்த படம் குறித்த தகவல்களை இவரது ரசிகர்கள் இப்போதே ஆராயத் தொடங்கிவிட்டனர்.

அவர்களுக்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக உருமாறியிருக்கும் ரித்திகா சிங்கின் அடுத்த படமும் இறுதிச்சுற்று தானாம். இந்தமுறை இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ரித்திகா.