தல57 படத்தில் ரித்திகாசிங்கிற்கு வாய்ப்பு ? -கசிந்த தகவல்

வேதாளம் படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் 57-வது படத்தையும் சிவா இயக்கும் நிலையில், அந்த படத்தின் ப்ரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை 15-ந்தேதி முதல் படம் தொடங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டு நாயகிகள் நடிக்கும் அந்த படத்தில் ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்த மாகியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு நாயகி யார் என்பது சஸ்பென்சாக உள்ளது. அதனால் அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்ற யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இறுதிச்சுற்று படத்தில் நடித்து விட்டு விஜயசேதுபதியுடன் ஆண்டவன் கட்டளையில் நடித்துள்ள ரித்திகா சிங்கின் பெயரும் அந்த கம்பெனி வட்டாரத்தில் அடிபடுவதாக இன்னொரு புதிய செய்தி தற்போது கசிந்துள்ளது.

Comments

comments